நல்லோரின் வாழ்க்கையைப் போன்று | அருட்தந்தை அருண்

இறையேசுவில் அன்புக்குரிய என் இனிய மக்களே, இன்றைய நாளில்,  நாம் திருப்பாடல் ஒன்றை தியானிக் இருக்கின்றோம்.  “நல்லோரின் வாழ்க்கையைப் போன்று” என்ற தலைப்பிலே  நாம் தியானிக்க இருக்கின்றோம். 

திருப்பாடல் என்பது இறைவனைப் பற்றி அவரது வல்லமையான செயல்கள் மற்றும் அவரிடம் நமது  மன்றாட்டுகளையும்,  நன்றிகளையும்,  இறைவனை புகழ்ந்து பாடும் ஒரு பகுதியாக  இந்தத் திருப்பாடல்  என்னும் புத்தகம் அமைந்திருக்கின்றது.

  இப்பாடலில் 1. கடவுளைப் புகழ்ந்து  பாடுதலும்,

                       2.  கடவுளிடம் உதவிகேட்பதும்

                        3.  கடவுளே எங்கள் அனைவரையும் பாதுகாத்தருளும் என்றும்

                        4.  கடவுளே நீரே எங்களை மீட்டருளும் வேண்டுமென்றும்,

                         5. நாங்கள்  உமக்கு எதிராக செய்த  பாவங்களுக்கான  மன்னிப்பை தந்தருளும் என்றோம்

                         6.  எங்களுக்கு அறிவுரையும் ஆசீரையும் அளித்தருளும் என்றும்

 இறைவனிடம் மன்றாடும் பல்வேறு   ஜெபங்கள் அடங்கிய  திருப்பாடல் ஆகும்.

இன்று தியானிக்க கூடிய  முதலாம் திருப்பாடல் கூறும் கருத்து என்ன?

   நல்லவர்கள் மற்றும்  பொல்லாதவர்கள் ஆகியோரின் பண்பு நலன்களை அறிவுறுத்தும் பாடலாக இன்றைய முதலாவது  திருப்பாடல் அமைந்திருக்கின்றது.

 இவ்வுலகில் வாழும் நல்லவர்கள் சிலர்  இருப்பதினால்  நமக்குm. தேவையான நல்ல  மழையினை அவ்வப்போது இறைவன் நமக்கு அருளுகின்றார் என்று பலர் கூறுவதை கேட்கின்றோம். 

 நல்ல மனிதர்கள் எப்போதுமே நல்ல வழியில் மட்டுமே நடப்பார்கள். எவ்வித துயர சூழ்நிலை ஏற்பட்டாலும்,  என் சாவின் பிடியில் சிக்கினாலும் இறைவனுக்கு உகந்த படி நல்ல வழியில் நடந்து சாட்சியும் பகிர்வார்கள்.  பிறரை இகழ்ந்து,  பிறர் மனம் புண்படும்படி  செயல்பட மாட்டார்கள்  மாறாக இறைவனின் அன்பு, அரிய மற்றும் மாபெரும் செயல்களை புகழ்ந்தும்  இனிமையான வார்த்தைகளை பேசியும்  இறைவனின் ( திருச்சட்டத்தின்படி)

 அன்பு கட்டளைகளில் என்றும் மகிழ்ந்து ஒவ்வொரு நொடிப்பொழுதும்  வாழ்வதால்.நேர்மையானவர்கள்,  நல்லவர்கள்,  அல்லது நற்பேறு பெற்றவர்களின்  வாழ்க்கை எப்போதும் பசுமையாய்,  இனிமையாய், வெற்றியை கொண்டாடுபவர்கள் ஆக வாழ்ந்து விடுவார்கள். ஆனால்

 தீமை செய்பவர்களின்,  அல்லது    பொல்லாதவர்களின்,  அல்லது  நெறிகெட்ட அவர்களின் வாழ்க்கையானது  முற்றிலும் நல்லவர்களின் வாழ்க்கை முறைக்கு மாறுபட்டதாய்  அமைந்திடும்.  ஆக, நமது வாழ்க்கை நல்லவர்களின் வாழ்க்கை போன்று அமைந்திட வேண்டும் என்று சொல்லி தொடர்ந்து திருப்பாடல்  ஒன்றைத்  தியானிப்போம்.

ஆமென்

அருட்தந்தை அருண் sdc.

ஸ்பெயின்..

 

 

Add new comment

12 + 2 =