திருவுளப்படியே

திருஉறைவிட அமைப்பையும் அதன் அனைத்துப் பொருள்களின் அமைப்பையும் நான் உனக்குச் சொல்லிக் காட்டுகிறபடியெல்லாம் செய்யுங்கள்.

விடுதலைப் பயணம் 25-9.

ஆண்டவர் தான் வாசம் செய்யும் இடம் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.  உடன்படிக்கை பேழை, அப்பத் தண்டு, விளக்குதண்டு, பலி பீடம், திருவுடை முற்றம், குருக்களின் உடைகள் அனைத்தையுமே  எப்படி இருக்க வேண்டும் என ஆண்டவரே மோசேக்கு சொல்கிறார்.  அவர் தூய நேர்த்தியான இடங்களில் வாசம் செய்ய விரும்புகிறார்.  

நாம் நம் ஆலயங்களையும், பலி பீடத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது நம் கடமை ஆகும். திருவிழா நாட்களில் மட்டும் அல்ல , எல்லா நாட்களிலும் நாம் அதை கடை பிடிக்க வேண்டும்.  

தூய ஆவியார் வாசம் செய்யும் நம் உள்ளம் எப்படி உள்ளது. திருத்துவ இறைவன்  வாழும்  நம் உடல் எப்படி உள்ளது. . நம்முடைய சிந்தனை , சொல் , செயல், நடத்தை, வாழ்க்கை எல்லாவற்றிலும் தூய்மையோடு, அவர் வந்து தங்கும் ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவோம். தரணியில் அவர் மக்களாய் வாழ்வோம்.

 

அன்பு தந்தையே, உம்மை ஆராதிக்கிறோம்.  உம் பிள்ளைகளாக நீர் வாசம் செய்யும் ஆலயமாக நாங்கள் தூய உள்ளத்தோடு,  உம்மை பிரதிபலித்து  வாழவும் , ஒவ்வொருநாளும் உம்மை எம் கண்முன் கொண்டு ஓடி ஜெயிக்க அருள் தாரும்.

Add new comment

3 + 11 =