துணை வாரும்

மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.

விடுதலைப் பயணம் 14-21.

ஆண்டவர் பாதை இல்லா இடங்களில் பாதையை உருவாக்கும் கடவுள். இஸ்ரேல் மக்கள் செங்கடலுக்கும் பார்வோனுடைய சேனைக்கும் இடையில் மாட்டிக் கொண்டார்கள்.  எந்த பக்கம் திரும்பினாலும் வழி இல்லை . சாவது உறுதி.  ஆனால் ஆண்டவர் அவர்களோடு இருந்ததால் , செங்கடல் நடுவே பாதை அமைய செய்கிறார். அவர்கள் அந்த பாதையில்  நடந்து கடந்தார்கள்.  

அவர் பாதை காட்டுபவர். நம் வாழ்க்கையில் கூட சில சமயங்களில் இப்படிபட்ட சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது.  ஆண்டவர் நம்மோடு இருந்ததால் தான் இன்று நாம் உயிரோடு நிற்கிறோம்.  ஆண்டவர் நம்முடைய துன்பங்களை பார்த்து கொண்டு  அமைதியாக இருக்க மாட்டார். ஓடி வந்து உதவி செய்வார். பாதை காட்டுவார்.

எல்லா பக்ககளும் அடைக்கபட்டாலும் , நம் கண்களை மலைகளை நோக்கி, அவரை நோக்கி  உயர்த்துவோம். ஆண்டவர் உதவி செய்வார். 

 

ஆண்டவரே , உம்மிடத்தில் எனக்கு நிலையான நிம்மதி உண்டு.  நீர் எனக்கு பாதை காட்டும் கடவுள். இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் நீர் என்னோடு இருப்பீர் என்று நான் நம்புகிறேன் .  எனக்கு முன்பாக உம் சமூகத்தை அனுப்பி,  என் வழிகளை நீர் ஆயத்தம் செய்வீர் . எனக்கு பயமில்லை. பாதுகாக்கும் கடவுள் என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை.  துணை வாரும் ஆண்டவரே  ஆமென்

Add new comment

9 + 4 =