எவ்வாறு நமது “அன்னை வேளாங்கண்ணி மாதா”திருத்தலத்திற்கு மரியாவின் பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்வார்களோ அதைப்போல பல்வேறு நாடுகளிலிருந்து குறிப்பிட்ட தூரம் வாகனங்களில் வந்தப் பிறகு(400-800km), இந்த சந்தியாகோ தே கம்போஸ்டாலாவிற்கு நடந்துசென்று சந்தியாகப்பருக்கு வணக்கம் செலுத்துவார்கள். குறிப்பாக போர்ச்சுகல், பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் இருந்து பக்தர்கள் இவரை மகிமைப்படுத்துவார்கள். இவ்வாறு இன்றைய புனிதரை பேசிக்கொண்டே இருக்கலாம்.
இன்றைய நற்செய்தியின் உரையாடலில் இயேசு, அவர்களிடம் (சந்தியாகப்பர், யோவான்) “நான் குடிக்கும் கிண்ணத்தில் உங்களால் பருக இயலுமா?” என்ற கேள்வி எழுப்புவார். இதன் உள்ளார்ந்த கருத்து என்ன என்று சற்று யோசித்தால், பிற்காலத்தில் இயேசுவிற்காக இறக்க நற்செய்தியை பறைசாற்றும் போது ஏற்படக் கூடிய எல்லா விதமான சவால்களையும், துன்பங்களையும், துயரங்களையும் ஏன் இறப்பதற்கும் உங்களால் இயலுமா? என்பதற்கு விடையாக புனித சந்தியாகப்பர் மறை சாட்சியாக உயிர் நீத்தார். ஆகவே அன்பார்ந்தவர்களே, இன்று நாம் கொண்டாடும் புனித சந்தியாகப்பரைப் போன்று துணிவுடன் நற்செய்தியை வாழ்ந்தும், பறைசாற்றவும் அருள்வேண்டி தொடர்ந்து, இறைவனிடம் மன்றாடுவோம். ஆமென்.
அருட்தந்தை அருண் sdc.
ஸ்பெயின்..
Image Credits: whatsapp
Add new comment