அவர் நமக்குத் துணை

அவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும் சிறைமேலாளன் விசாரிக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.

தொடக்க நூல் 39-23

யோசேப்பு தந்தையை விட்டு ,தன் சொந்த குடும்பத்தை விட்டு ,தனியாக எகிப்து  நாட்டில்  இருக்கிறார் . அங்கு அவர் மேல் அவர் செய்யாத  பாவம் சுமத்தப்பட்ட போதும் அவர் பயப்படவில்லை .   சிறைச்சாலையில் தள்ளப்பட்டு தண்டனை அனுபவித்த போதும் அவர் சோர்வு அடையவில்லை.  ஏனெனில் எல்லா நேரங்களிலும் ஆண்டவர் அவரோடு துணை இருந்தார்.  அதனால் யோசேப்புக்கு எதிலும் குறைவு ஏற்படவில்லை . ஆண்டவரே அவரை வழிநடத்தினார் . 

நம் ஆண்டவர் நம் இன்பத்திலும் துன்பத்திலும் நம்மோடு இருந்து நமக்கு துணை இருக்கும் கடவுள். கை கொடுத்து தூக்கி விடும் தந்தை.  அன்பை பொழியும் அன்னை. உள்ளம் கலங்க வேண்டாம். எப்படிப்பட்ட  சூழ்நிலை ஆனாலும் ஆண்டவன் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார் .

 

ஆண்டவரே எங்களுக்கு எல்லாமானவரே உம்மை   போற்றுகிறோம். எங்களுடைய சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் நீர் எங்களோடு இருந்து எங்களை வழி நடத்துவீர்  என்று நம்புகிறோம்.  எங்களோடு இரும்.   ஆசீர்வதியும்.  ஆமென்.

Add new comment

6 + 3 =