கணக்கு புலி ஆட்டம்! நீங்க புலியா?

பல்லாங்குழி

பல்லாங்குழி தமிழ்நாட்டின் மிக பழமையான பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று. இது பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. மேலும் ஆப்ரிக்காவில்  சூடான் ,கென்யா, உகான்டா,தான்சானியா,தென்ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது. ஆப்ரிக்காவில்  ''மென்கலா'' என்ற பெயரில் பல்லாங்குழி விளையாடப்பட்டு வருகிறது. எகிப்து பிரமிடுகளிலும் பல்லாங்குழி செதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 'அடியார்க்கு நல்லார்' என்ற உரையில் இந்த விளையாட்டை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்விளையாட்டு பண்டைய காலத்திலிருந்து விளையாடப்பட்டு வருகிறது.

தொடக்க காலத்தில் கிராமத்தில் மண்தரையில் குழிகளை தோண்டி விளையாடப்பட்டது. நாளடைவில் வளர்ச்சிப் பெற்று மரப்பலகையில் குழிகளை அமைத்து விளையாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டை பன்னாங்குழி, பதினாங்குழி, பரலாடும் குழி, பாண்டி எனவும் கூறலாம். இரண்டு பேர் விளையாடும் இந்த ஆட்டத்தில் ஒருவருக்கு ஏழு குழுக்கள் வீதம், மொத்தம் 14 குழிகளை கொண்டு இந்த பல்லாங்குழி ஆட்டம் விளையாடப்படும். குழிகளுக்குள் புளியங்கொட்டைகள் அல்லது சோவிகளை குவித்துவிட்டு, குழியிலிருந்து காய்களை எடுத்து வலமிருந்து இடதுபுறமாக அனைத்து குழிகளிலும் காய்களை போட்டு வரவேண்டும் காய்கள் தீர்ந்த பின்பு அடுத்த குழியிலிருந்து காய்களை  எடுத்து போடவேண்டும் இவ்வாறு போட்டு வரும் பொது காய் தீர்ந்து விடும்போது பக்கத்து குழியில் காய்கள் ஏதும் இல்லாமல் இருந்தால் அதற்கு அடுத்த குழியில் உள்ள காய்கள் அனைத்தையும் எடுத்துக்கொள்ளலாம். நிறைய புளியங்கொட்டைகள் இருக்கும் குழிகளை புதையல் என்று அழைப்பார்கள். எனவே புதையலை சென்றடைய எந்த குழியை கலைக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து விளையாட வேண்டிய விளையாட்டு. இவ்விளையாட்டில் முடிவு தெரிய அதிக நேரம் எடுக்கும் ஆட்டத்தை தொடர முடியாவிட்டால் வெற்றி,தோல்வியை முடிவு செய்ய எவரிடம் காய்கள் அதிகமா இருக்குமோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.பல்லாங்குழி விளையாட்டில் பல வகைகள் இருக்கின்றன 1. பசுப்பாண்டி, 2. சரிப்பாண்டி, 3. எதிர்ப்பாண்டி, 4. இராஜாப்பாண்டி, 5. காசிப்பாண்டி, 6. கட்டுப்பாண்டி, 7.சீதப்பாண்டி என்று தமிழறிஞர்கள் பிரித்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில், நாட்டுமக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றிய நம் பிரதமர் மோடி அவர்கள், தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக இந்த பல்லாங்குழி விளையாட்டை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். "இதுபோன்ற விளையாட்டுகள்தான் நம் தேசத்தின் மக்களை இன்றைக்கும் உயிர்ப்போடு வைத்து இருக்கிறது" என்றும் பாரத பிரதமர் அவர்கள் கூறினார். 

பயன்கள்

குழிகளில் சோவிகளை எடுத்து விளையாடும் போது விரல்களுக்கு பயிற்சி கிடைக்கும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் எண்ணிக்கைத்திறன், நுண்ணிய கணிதத்திறன் அதிகரிக்கிறது. பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கை திறன் அதிகரிக்கிறது. இப்போ இருக்க நவீன காலத்துல நம்ம பிள்ளைகளை அபாகஸ் கிளாஸ் கு அனுப்பி கணக்கு கத்துக்க வெக்கிறோம் அதுக்கு பதில வீட்லயே வெளயாடுற இந்த பல்லாங்குழி விளையாட்டுல இருந்து அவங்க இன்னும் அதிகமான விஷயங்களை கத்துப்பாங்க.இது மட்டும் இல்லாம இன்னும் நிறைய பாரம்பரிய வெளயாட்டுகள் இருக்கு.. அது எல்லாத்தையுமே நம்ம அன்றாடம் வாழ்க்கைல விளையாடி அதிலிருந்து வர பயன்களை அனுபவிப்போம். அதுக்கு இந்த ஊரடங்கு காலம் ஒரு தொடக்கம் ஆஹ் இருக்கட்டும்.. நன்றி.

credit Music-"Art of Silence - by Uniq" is under a Creative Commons license

 

 

 

 

Add new comment

5 + 2 =