கேட்கிற கடவுள்

காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.

தொடக்க நூல் 4-13.

அபே லுடைய காணிக்கையை கடவுள் ஏற்று கொண்டதால் பொறாமை கொண்ட காயீன் தம்பியை கொன்று விட்டான்.எனவே கடவுள் காயீனிடம் ' நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார்

அதற்கு காயின் நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!” என்றான்.

ஆண்டவர் அவனிடம் “அப்படியன்று; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்” என்று சொல்லி, காயினைக் கண்டு பிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார். காயீனின் வேண்டுதலை கேட்டார். 

நம் கடவுள்  பாவியாக இருந்தாலும் அவனுடைய வேண்டுதலை கேட்கிற கடவுள். பாதுகாப்பு கொடுக்கிற இறைவன். எளியவனின் கூக்குரலை கேட்டு விடுதலை தருபவர். நம்மை அவருடைய பிள்ளைகளா கிய நம்மை விடுவாரோ. கண்டிப்பாக நம் வேண்டுதலுக்கு பதில் கொடுப்பார். உள்ளம் கலங்க வேண்டாம். 

 

ஆண்டவரே, இந்த அதிகாலையில் உம்மை துதிக்கிறோம்.  எங்கள் அன்பான தந்தையே ஜெபிக்கும் முன்னரே எங்கள் தேவை என்னவென்று அறிந்து செய்பவரே, இந்த நாள் முழுவதும் எங்களை காத்தருளும். எங்களோடு இருந்து நாங்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதியும்.   ஆமென்

Add new comment

7 + 2 =