வாழ்வின் இறுதி அரை மணி நேரம்


அமெரிக்காவில் கறுப்பின படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்வின் இறுதி அரை மணி நேரம் அவரது வாழ்வையே மாற்றி விட்டது. 

மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் கழுத்து நெறிப்பட்டு பொலிஸாரால் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க நாட்டையே உலுக்கி வருகிறது. ஆறாவது நாளை கடந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு 20 டாலர் நோட்டில் ஆரம்பமான இந்த சகாப்தம், ஜார்ஜின் உயிரையே மாய்த்து விட்டது. 
சிகரெட் வாங்குவதற்காக அருகில் இருந்த கடைக்குச் சென்ற ஜார்ஜ் 20  டாலர் நோட்டை கொடுத்துள்ளார். அது கள்ள நோட்டாக இருக்க கூடும் என்று சந்தேகித்த கடையில் இருந்த இளைஞன், உதவி எண் ஆனா 911 ஐ அழைக்க, போலீசார் அங்கு வந்துள்ளனர். ஜார்ஜ் கைகளில் பொலிஸார் விலகு மாட்டியபோது அதை பலமாக எதிர்த்துள்ளார். 

அப்போது அங்கு வந்த காவல் அதிகாரி சாவின், ஜார்ஜ்ஜை ரோந்து வாகனத்தில் ஏற்ற, மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து முயன்றுள்ளார். அப்போது  ஜார்ஜ்ஜை, சாவின் இழுக்க முயன்றபோது ஜார்ஜ் கீழே விழுந்தார். காவலர் அதிகாரி சாவின், ஜார்ஜ் அவர்களின் தலைக்கும் கழுத்துக்கும் இடையே முழங்காலை வைத்து அழுத்தியுள்ளார்.  சுமார் 8 நிமிடம் 46 நொடிகள் ஜார்ஜ் கழுத்தில் காவலர் சாவின் முழங்காலை வைத்து அழுத்தியுள்ளார் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

"என்னால் மூச்சு விடமுடியவில்லை, ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கூறியபடி ஜார்ஜ் இறந்துள்ளார். தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் வாழ எண்ணி தன்னை விட்டுவிடுமாறு ஜார்ஜ் கெஞ்சியும் அந்த காவலர்கள் மனமிறங்கவில்லை. 

“உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” என்ற விவிலிய வார்த்தைக்கு மாறாக இங்கு அனைத்தும் நிகழ்ந்துள்ளது. தன்னை நேசிக்க, தனக்கு நல்லது செய்துகொள்ள, தனக்காக ஜெபிக்க இங்கு அனைவர்க்கும் நேரம் இருக்கிறது. ஆனால் மற்றவரை நேசிக்க மறந்துபோகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

"உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?". நமது உடல் மட்டுமின்றி அடுத்தவரின் உடலும் தூய ஆவியார் தாங்கும் கோவில் என்பதை உணர்வோமாயின் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி நிகழ வாய்ப்பிருக்காது.
 

Add new comment

14 + 1 =