இளம்பெண்ணை கடித்துக்குதறிய சிங்கங்கள்


Picture Credits: Google

சிங்கங்களை கையாள்வதில் நிபுணரான ஜெனிபர் ப்ரவுன் (35) என்பவர், ஆஸ்திரேலியாவின் வடக்கு நௌராவில் இல்ல ஷோஅல்ஹாவின் என்னும் உயிரியல் பூங்காவில் பணிபுரிகிறார். ஒருநாள் சிங்கங்கள் இருப்பிடத்தை சுத்தம் செய்ய செல்லும் போதும் அங்கிருந்த ஏரியல் மற்றும் ஜூடா ஆகிய இரண்டு சிங்கங்களும் அவர் மீது பாய்ந்து அவரை தாக்கின. மேலும், அவரது தலை மற்றும் கழுத்தை கடித்துக் குதறின. 

ஜெனிபரை அந்த சிங்கங்கள் ஏன் கடிதுகுதறியன என்பது மர்மமாக உள்ளது. அவருடன் பணிபுரிந்த இரண்டு ஊழியர்கள் புத்திசாலித்தனமாக அந்த சிங்கங்களை அப்புறப்படுத்தி ஜெனீபரை மீட்டனர். 

பின்னர், வனவிலங்கு பூங்காவினுள்ளேயே வைத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் சுயநினைவிழந்து இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். 

கடந்த அக்டோபர் மாதம் ஜெனிபிர் தான், அந்த இரண்டு சிங்கங்களுக்கு கேக் வெட்டி, தோரணங்கள் கட்டி பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். ஆனால், சில மாதங்களுக்கு பிறகு ஜெனிபரையே அந்த சிங்கங்கள் மிகவும் மோசமான நிலையில் தாக்கியுள்ளன. 

Add new comment

2 + 14 =