Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வாழ்வளிக்கும் அழகியலில் வைரஸ் இல்லையே!
வாழ்வினை வாழ்ந்தவர்கள் என்று நம்மால் உணரப்படுபவர்களின் வாழ்வியலின் மூலக்கூறுகள் மூன்று. அது உண்மை நன்மை அழகு. இந்த மூன்றும் நம் வாழ்வில் சங்கமிக்கும்போது நம் வாழ்வு பிறரில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது, வாழ்வளிக்கும் வரலாறாக மாறுகிறது என்பதனை முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்கள் மானுடவியல் பார்வையில் வாழ்ந்துசென்றவர்களின் துணைகொண்டு பகிர்ந்துகொள்கிறார்கள்.
நலன் நலகும் இச் செய்தியைப் பார்த்து, பிறருடன் பகிர்வோம். வாழ்வளிக்கும் வாழ்வியலைத் தொடங்குவோம்.
வாழ்க்கையில் ஆனந்தம் தரும் ஆதிமூலம் இருக்கிறதா? கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பின்னர் வாழ்க்கையைப் பற்றி அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். பலர் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால் நாம் வாழ்க்கையை வாழவில்லை. வாழ்க்கையின் மூலக்கூறுகளை வைத்து வாழ்க்கையை வாழவில்லை என்கிறார்கள். The Corona is the result of life that we lived so far.
ஏன்? இயற்கையை இயற்கையாக பார்க்கவில்லை. பெண்னை பெண்ணாகப் பார்ப்பதில்லை. தேவையை தேவையாகப் பார்க்கவில்லை. 6 வயது சிறுமியை 5 ஆண்கள் நாசப்படுத்துகிறார்கள். இயற்கையை அழிக்கின்றோம். இதனால்தான் கொரோனா வந்திருக்கின்றது என்கிறார்கள். இதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கமுடியவில்லை என்றால், எங்கிருந்து வருகிறது. நம்முடைய வாழ்வியலில் இருந்து வருகிறது. அப்படி சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் மூன்று மூலக்கூறுகள் கொண்டு நாம் வாழவில்லை.
வாழ்க்கையின் மூன்று மூலக்காரணிகள்: உண்மை நன்மை அழகு என்று சொல்கிறார்கள். இந்த மூன்றையும் விட்டுவிலகி நாம் இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கின்றோம். அதனால்தான் கொரோனா வைரஸ் வந்திருக்கின்றது என்கிறார்கள்.
உண்மை (Truth): உண்மையாக நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை. நாம் வாழ்கின்ற வாழ்க்கை பிறரை வாழவைக்கவேண்டும். அதனுடைய மூலம் நீங்கள் கடவுள் என்று சொல்லலாம். வாழ்வைத் தருகிறார், வாழவைக்கிறார். உண்மையான வாழ்வை வாழ்வதற்கு, பிறருக்கு நன்மை செய்கின்றபோது, நன்மை (Goodness) வருகின்றது. உண்மையான வாழ்க்கை வாழ்வதற்கு நன்மைகள் செய்கின்றபோது, அது அழகாக (Beauty) இருக்கின்றது.
உண்மை நன்மை அழகு ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றபோது நாம் பெண்னை பெண்ணாகப் பார்ப்போம், மதிப்போம். குழந்தைகளை குழந்தைகளாகப் பார்ப்போம். ஒரு மாமரம் மாம்பழம்தான் கொடுக்கும், அதனை நீங்கள் பிடிங்கிக்கொண்டுபோய் ஆப்ரிக்காவின் ஒரு மூலையில் நட்டிவைத்தாலும். ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. எனவேதான் இதைப் போன்ற நோய் தொற்று உருவாகிறது என்கிறார்கள்.
உண்மையான வாழ்வு பிறருக்கு வாழ்வைத் தருகிறது. இதனால் நன்மைகள் விளைகின்றது. அதுதான் beauty, அதுதான் அழகு. அழகு என்பது வெளியே பூசிக்கொள்வதல்ல. அன்னை திரேசா இளவரசி டயனா இவர்களின் புகைப்படத்தைக் கொடுத்து இவர்களில் யார் அழகு என்று 2006 ஆம் ஆண்டு ஒரு போட்டி வைத்தார்கள். அனைவரும் அன்னை திரேசாதான் அழகு என்றார்கள். ஏன் அவர்கள் உண்மை நன்மை அழகு ஆகிய மூன்றையும் ஒருசேர தன்னிலே வைத்திருக்கிறார்கள் என்றார்கள். பிறர் வாழவேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்தார்கள். சாக்கடை ஓரத்தில் பசியால் மடிந்து கொண்டிருந்தவனுக்காக அழுதார்கள். அவர்களை அணைத்தார்கள். அதுதான் அழகு.
ஆனால் மனிதர்கள் இயற்கையை அழித்து அழித்து பணத்தைச் சேர்த்தார்கள், பணத்திற்காக அலைந்துதிரிந்தார்கள். பணக்காரர்கள் அதிகமானார்கள். அதே வேளையில் ஏழைகள் அதிகமாக உருவானார்கள். இயற்கையும் மனிதமும் சிதைக்கப்பட்டது. வாழ்க்கை பொருள் மையமான வாழ்க்கையாக, வியாபாரம் நிறைந்த வர்ததகமானது. Person-hood இருந்து Object-hood மாறினார்கள். இப்படி செயல்பட்டதனால் மனிதம் சிதைக்கப்பட்டது. வாழ்வின் மூலக்கூறுகள் அவர்கள் வாழ்விலிருந்து அற்றுப்போனது.
நாம்; வாழவேண்டும். பிறரை வாழவைக்கவேண்டும். மகிழ்ச்சியாக வாழ வைக்கவேண்டும் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழமுயலும்போது, நாம் பேசுவதும் செயல்பாடுவதும் உண்மை நன்மை அழகு என்ற மூலக்கூறுகளால் நிறைந்திருக்கும். அப்பொழுது வாழ்க்கையில் வைரஸ் வராது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு நம்முடைய வாழ்வின் மூன்று மூலத்திற்கு செல்லவேண்டும். உண்மையாக இருக்கவேண்டும். நன்மைகள் செய்யவேண்டும். உண்மையாக இருப்பதும், நன்மைகள் செய்வதும்தான் அழகு என்று புரிந்துகொள்வதற்கு நமக்கு ஞானம் தேவை.
#Veritastamil #rvapastoralcare
Facebook: http://youtube.com/VeritasTamil
Twitter: http://twitter.com/VeritasTamil
Instagram: http://instagram.com/VeritasTamil
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
Website: http://www.RadioVeritasTamil.org
Blog: http://tamil.rvasia.org
**for non-commercial use only**
Add new comment