இயேசுவின் மூன்றாவது இறுதி வார்த்தைகள் - யோவான் 19:25-27

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய் என்றார். கானாவூரில் அழைத்த அதே வார்த்தையைக் கொண்டு தம் தாயை இயேசு அழைக்கிறார் அம்மா. அன்னை மரியாள் பெத்லகேமிலிருந்து கானாவுக்கும், கானாவிலிருந்து கல்வாரிக்கும் திருஅவையை அழைத்துச்சென்றது அன்னை மரியாள். கானாவில் அம்மா எனது நேரம் இன்னும் வரவில்லை என்று தயக்கம் காட்டிய இயேசு, இங்கு எந்த தயக்கமும் காட்டவில்லை. 

காரணம் அவருடைய நேரம் வந்துவிட்டது. எந்த நேரம் வந்துவிட்டது? தயககம் காட்டுகிறார்என்றார். கீழ்த்திசை ஞானிகள், வானதூதர்கள், இடையர்கள், சிமியோன், அன்னா ஆகியோர் எதிர்பார்த்த மெசியாவைக் காணும் நேரம் வந்துவிட்டது. மீட்பு என்பது நம் கதவருகில் உள்ளது.

அவருடைய மூன்றாவது இறுதி வார்த்தைகள் இரண்டு பகுதியாகச் சொல்லப்படுகிறது. இவரே உம் தாய் மற்றும் இவரே உம்; மகன். விவிலியத்தில் ஏவாளுக்கு இரண்டு பெயர்கள் கொடுக்கப்படுகின்றது – பெண், தாய். மரியாவுக்கும் லூக்கா நற்செய்தியாளர் பெண் என்றும், யோவான் நற்செய்தியாளர் தாய் எனவும் குறிப்பிடுகிறார். அன்னை மரியாள் பெண்ணாகவும் தாயாகவும்இறைவனின் திருவுளம் கொண்டு பயணிக்கிறார். 

பொதுவாக சிலுவையின் அடியில் அன்னை மரியாவின் ஏழு துயரங்கள் ஆனால் அதையும் தாண்டி ஒரு துயரம் இருக்கின்றது. அது என்னவென்றால், எதுவும் இல்லாதநிலை, கையருநிலை அல்லது மற்றவர்கள் தயவில் வாழும்நிலை. அதைத்தான் இங்கு பார்க்கிறோம்.

இவரே உம் மகன் என்று வொல்கிறபோது, இயேசு என்னும் மகனுடைய பாதுகாப்பில் இருந்த தாய் இப்பொழுது சீடரின் கையில். என் மகனோடு இறந்திருக்கக்கூடாதா என்று கூட எண்ணியிருக்கலாம். ஆனாலும் அத்தகைய துன்பத்தையும் அனுபவிக்கத் தயாராக இருந்தார் அன்னை மரியாள். இயேசு அவரைத் தாயாக அனைவருக்கும் கொடுக்கிறார். இவரே உம் தாய் என்று யோவானின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறவில்லை. 

தாய்மை என்பது பொறுப்புணர்வும் அர்ப்பணமும் கொண்டது. முதல் தாயான ஏவால் தவறுசெய்தது மட்டுமல்ல, அவருடைய பொறுப்பையும் தட்டிக்கழித்தார். ஆனால் அன்னை மரியாள் கானாவூரில் தன்னுடைய பொறுப்புணர்வை உணர்ந்து புதுமை நிகழக்காரணமாகிறாhர். அதே வேளையில் சிலுவை வரைக்கும் இயேசுவைப் பின்பற்றி தன்னுடைய அர்ப்பணத்தை எண்பிக்கின்றார். ஆக, அனைவருக்கும் தாயாக மாறுகிறார்.

இவரே உம் மகன் என்று சொல்கின்றபோதும், யோவான் உம் மகன் என்று குறிப்பிடவில்லை. ஆக நம் அனைவரையும் இயேசு அன்னை மரியாவிடம் ஒப்படைக்கிறார். அவர் நமக்கு தொடர் தாயாக இருக்கின்றார். இறையாட்சி இயக்கத்திற்குள் இயேசுவின் வழியில் அன்னையின் குழந்தைகள். அதே வேளையில் நாம் அவருடைய மகன் என்றால், அனைவரையும் நாம் சகோதர சகோதரிகளாக ஏற்று அன்பு செய்ய அழைக்கப்படுகிறோம். 
 

Add new comment

15 + 5 =