சிலுவையில் இயேசுவின் இறுதி ஏழு வார்த்தைகள்

சிலுவையில் இயேசுவின் இறுதி ஏழு வார்த்தைகள். இயேசுவின் இறுதி ஏழு வார்த்தைகளின் முக்கியத்துவம் பற்றிய ஒரு விளக்கவுரையை இங்கு காணலாம். படைப்பின் தொடக்கத்தில் அங்கே இருந்தது ஒரு மரம், ஒரு ஆண், ஒரு பெண், படைப்பின் நிறைவில் அங்கேயும் ஒரு மரம், ஒரு ஆண், ஒரு பெண்.

முதல் மரத்தால் பாவம் வந்தது, இரண்டாவது மரத்தால் வாழ்வு வந்தது. பொதுவாக யூத சமூகத்தில் ஒரு மனிதனின் நல்ல மரணத்தை அவனுடைய குழந்தைகள், அதிகம் வாழ்ந்த ஆண்டு,  சொந்த கல்லறையை வைத்தே நிர்ணயம் செய்தார்கள். ஆனால் இயேசுவுக்கு அது நிகழவில்லை - குழந்தையில்லை, குறைந்த ஆண்டு, கல்லறை இல்லை. ஆக மக்களின் பார்வையில் கெட்ட சாவாகத் தோன்றினாலும் அதுவே மீட்பளிக்கும் மருந்தாக உள்ளது. 

விவிலியத்தில் நான்கு முக்கிய நபர்களின் இறுதி உரைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. யாக்கோபு – பழைய இஸ்ரயேலின் தந்தை, மோசே - கானான் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மோவாபிய சமவெளியில் கூறிய ஆசிமொழி, இயேசுவின் இறுதி ஏழு வார்த்தைகள் மற்றும் ஸ்தாவான் - திருத்தூதர் பணிகள் நூலில் அவரின் இறுதி அருளுரை.

இனி இயேசுவின் இறுதி ஏழு வார்ததைகளைப் பார்த்து பயன்பெறுவோம். 

Add new comment

3 + 2 =