Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
குணமாக விரும்புகிறாயா?
நீ உன் கடவுளாகிய ஆண்டவரை வழிபடவேண்டும். அவர் உன் உணவு தண்ணீர் இவற்றின் மேல் ஆசி வழங்குவார். அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார் - விடுதலைப் பயணம் 23:25. "நாம் உடல் நலத்துடன் வாழவேண்டுமென்பதே, ஆண்டவருடைய விருப்பம். இயேசு உலகத்தில் வாழ்ந்த காலத்தில் நோயாளிகள், அசுத்த ஆவி பிடித்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் அனைவரையும் குணமாக்கினார். அவர்களை பார்த்தவுடனே அவர் கேட்பது குணமாக விரும்புகிறாயா? குணமாக்கியதும், இனிமேல் பாவம் செய்யாதே என்பதாகும்.
இஸ்ராயெல் மக்களை ஆண்டவர் ஆசீர்வதிக்கும்போது, நோயை உன்னை விட்டு நீக்குவேன் என்று வாக்களித்தார். நாம் நோயிலிருந்து சுகம் பெறும்போது, நன்றி செலுத்துவது போலவே, ஒவ்வொரு நாளும் நோயில்லாத வாழ்க்கையையும் ஜெபத்தில் கேட்டுப் பெற்று அதற்காகவும் நன்றி செலுத்த வேண்டும். நிழலின் அருமை வெயிலில்தானே தெரியும்.
ஆறு நாட்கள் வேலை செய்துவிட்டு, ஏழாம் நாளிலே ஓய்வு பெற வேண்டும் என்பது தானே கட்டளை. நமது உடலுக்கு நிச்சயமாகவே ஓய்வு தேவை. உடல் மிகவும் களைத்து போய்விட்டதென்றால், நாம் சரியாய் சிந்தித்துச் செயல்படமுடியாது. உடல் பெலவீனப்பட்டு நோயில் படுக்கும்போது ஆண்டவரை தேடுவதில் என்ன பலன். ஒவ்வொரு நாளும் ஆண்டவரிடம் வேண்டனும்." நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யும்போது, கடவுள் தம்முடைய சித்தத்தின்படி தாம் செய்ய வேண்டியவற்றை செய்வார். உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” யோவான் நற்செய்தியில் கூறபட்டுள்ளது.
ஜெபம்: ஆண்டவரே எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். எங்களை விட்டு இந்த கொடிய நோயை, அதனால் உருவாக்கப்பட்ட பயத்தை, தனிமையை மாற்றும். மீண்டும் உம் பிள்ளைகளாக வாழும் சூழ்நிலையை எங்களுக்கு தாரும். ஆமென்.
Add new comment