சந்தர்ப்பங்களை பயன்படுத்துவோமா?

இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள் - திருவெளிப்பாடு 3:20. சந்தர்ப்பங்கள் என்றென்றும் நமக்கு கிடைத்துக் கொண்டேயிருப்பதில்லை. சரியான சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விடும்போது,  நிச்சயமாக வேதனைப்பட வேண்டியது வரும்.

யூதாஸ்காரியோத்து தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்தான். அவன் யேசுவின் சீடனாக புகழ் பெற்று இருந்திருக்கக்கூடும். ஆனால் முப்பது வெள்ளிக்காசுக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டான். வெள்ளிக்காசு அவனுக்கு ஆறுதலை கொடுக்கவில்லை. அதை வீசியெறிந்துவிட்டு தன் முடிவை தேடிக் கொண்டான்.

நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்று இயேசு சொல்கிறார். இதுவே ஏற்ற காலம். இதுவே மீட்பின் நாள். மனம் திரும்பி வருகிற ஒருவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. எனவே இன்றே அவரை பற்றி கொள்வோம். பாவத்தை விட்டு விலகுவோம்.

செபம்: ஆண்டவரே வானத்திற்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தோம் இன்று உம் பிள்ளையாகக் வந்திருக்கிறோம் அப்பா. எங்களை ஏற்று கொள்ளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை அனுபவிக்க எங்களை தகுதி உள்ளவர்களாக்க தூய ஆவியின் துணைதாரும். ஆமென்.

 

Add new comment

3 + 1 =