Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எதனால் மனம் தளர்ந்து போகிறோம்?
பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடைசெய்தனர் - மத்தேயு 4:11. இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அப்பொழுது அலகை இயேசுவை சோதிக்கிறது. இயேசுவுக்கு நாற்பது நாட்களுக்கு பிறகு நல்ல பசி எடுக்கும் சமயம் பார்த்து அலகை அவரிடம் வருகிறது. ஆனால் இயேசு தளர்ந்து போகவில்லை. அதற்க்கு அடி பணியவும் இல்லை. அதன் சொல்லை பொருட்படுத்தவும் இல்லை. அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.
இயேசுவின் அடிசுவடுகள் பின்பற்றும் நாம் மனம் தளர்ந்து போகிறோமா? உலகம், அதன் மாய கவர்ச்சிகள், இணையதளங்கள், இவற்றில் மயங்கி எதுக்காக அழைக்கப்கப்பட்டோம் என்பதை மறந்து வழிதவறி போகிறோமா? பிறருடைய வஞ்சக பேச்சுகளில் மயங்கி இருளை நோக்கி செல்கிறோமா? சிந்திப்போம்.
இந்த உலகத்திலேயே நாம் பரலோக வாழ்வை வாழ்ந்தால் தான் நாம் அந்த பரலோகத்திற்கு செல்ல முடியும். நாம் நமக்கு வரும் சோதனைகளை எதிர்கொண்டு செயித்தோம் என்றால் அச்சோதனையின் முடிவில் வானதூதர்கள் நமக்கு துணை வருவார்கள். நாம் தெய்வீக வல்லமையை பெற்று இறை பிரசன்னத்தை உணர்வோம்.
செபம்: ஆண்டவரே நாங்களும் செபம், தவம், தர்மங்களால் இன்னும் அதிகமாக உம் வல்லமையை பெற்று உமக்கு சாட்சியாக வாழ துணை செய்யும். தூய ஆவியின் அருள்தாரும். விண்ணக சந்தோசத்தை மண்ணகத்திலும் அனுபவிக்க துணைசெய்யும். ஆமென்.
Add new comment