அவர் விரும்பும் நோன்பு

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்? - எசாயா 58:5. ஆண்டவர் உண்ணா நோன்பை விட நமது வாழ்வில் ஏற்படும் மாற்றத்தை விரும்புகிறார். உணவை குறைத்து நோன்பிருந்து அவருக்கு பிடிக்காத தவறுகளை செய்யும் போது அது அவருக்கு பிடித்தமான நோன்பு அல்ல என்கிறார் ஆண்டவர். 

1.நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் (பிலிப்பியர்  2:14). முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். 

2. மன்னிக்கும் குணத்தோடு இருக்க வேண்டும் (எபேசியர் 4:31). மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்.

3. நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும் (மத்தேயு 6:31). ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.

4. நன்மை செய்ய வேண்டும் (லூக்கா 6:27). உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.

5. பொறுமையோடு இருக்கவேண்டும் (நீதிமொழிகள் 15:18). எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்; பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார்.

6. நாவைக் கட்டுப்படுத்த வேண்டும் (திருப்பாடல்கள் 34:13). அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!

செபம்: ஆண்டவரே, இந்தக்  நாட்களில் கோபத்தை விலக்கி, நாவை கட்டுப்படுத்தி, பிறருக்கு நன்மை செய்து வாழ வரம் தாரும். எங்கள் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தும். ஆண்டவரே எங்கள் செயல்களை உமக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கக் செய்யும். எங்கள் வாழ்வில் உம் துணை எப்பொழுதும் இருக்க செய்யும். ஆமென்.

Add new comment

4 + 1 =