இது அழியாதது நிலையானது

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? - லூக்கா 9:25. ஒரு மனுதனுடைய ஆன்மா உலகத்தை காட்டிலும் விலை மதிப்பு பெற்றது. நமது பணம், பொருள், பெருமை, படிப்பு, பதவி, மேன்மைகள், செல்வாக்குகள் எல்லாவற்றையும் விட நம்முடைய ஆன்மாவே ஆண்டவருடைய பார்வையில் விலையேறப்பெற்றதாயிருக்கிறது.

நாம் நம்முடைய ஆன்மாவை பாதுகாத்து கொள்ள வேண்டும் தூயதாக வைத்திருக்க வேண்டும். நாம் உயிர் வாழுகிற நாட்கள் கொஞ்சம்தான்.  ஆனால் சாவுக்குபின் வரும் வாழ்வு நிலை வாழ்வு. அழியாதது. என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியது. நாம் வாழும் நாட்களில் நம் ஆன்மாவை குறித்து கவலைபடாமல் விட்டு விட்டால் விண்ணக வாழ்வு நமக்கு கிடைக்காது.

இறைவாக்கினர், திருத்தொண்டர், புனிதர்கள் தங்கள் ஆன்மாவை காத்து கொண்டார்கள். அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று லூக்கா நற்செய்தியில் உள்ளது. நாம் ஆண்டருடைய குரலை கேட்டு அதன்படி நடந்தால் நம் ஆன்மா அழிவு காணாது. ஆண்டவரை காணும்.

செபம்: ஆண்டவரே, பணஆசையோ பொருளாசையோ உலக நாட்டங்களோ எங்களை கறைபடுத்தி விடாதபடி எங்களை காத்து கொள்ளும். எங்கள் ஆன்மாவை அழிவு காண விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் நிலைவாழ்வின் பாதையில் நடக்க  எங்களுக்கு வழிகாட்டும். ஆமென்.

Add new comment

3 + 1 =