இதுவே நம் போர்வாள்

எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள் - எபேசியர் 6:18. நாம் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப்பட வேண்டும். அலகையை எதிர்த்து நிற்கும் வலிமையை பெறும் பொருட்டு கடவுளின் அருளை ஆடையாக அணிந்து  கொள்ளவேண்டும். ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் அல்ல, ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராட வேண்டிவரும். 

நமக்கு வரும் நோய்கள், தோல்விகள், சோர்வுகள், பயங்கள், நமக்கு எதிரான அரசாங்க சட்டங்கள் என பவிதமன போராட்டங்கள் உண்டு. எனவே எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைத்து நிற்க வல்லமை பெற நமக்கு கடவுளின் அருள் தேவை. நம் சுயபலத்தால் அது முடியாது. தூய ஆவியின் துணையோடு மட்டுமே நாம் போராட முடியும். 

ஆகவே உண்மையை இடைக்கச்சையாகவும், நீதியை மார்புக்கவசமாகவும் அணிந்து கொள்ளவேண்டும்; எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்து கொள்ள வேண்டும். மீட்பைத் தலைச்சீராவாகவும், கடவுளின் வார்த்தையைத் போர்வாளாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி நம்மை பாதுகாப்பில் வைத்து கொண்டால் எந்த  ஒன்றும் நம்மை பாதிக்காது. ஆண்டவர்நமக்கு கோட்டையாக அரணாக இருந்து பாதுகாப்பாக.

செபம்: ஆண்டவரே, அரணும் கோட்டையுமானவரே, உம்மை துதிக்கிறோம். உலகில் மனிதர்களோடும், வான மண்டலத்தில் உள்ள பொல்லாத ஆவிகளோடும், அலகையோடும் நாங்கள் போராடி செயிக்க உமது அருளை தாரும். என் அருள் உனக்கு போதும் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்றவரே, அந்த அருளை நிறைவாய் தந்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  ஆமென்.

Add new comment

16 + 1 =