கல்வியகங்களில் கற்றல் நடைபெறுகிறதா?

நாம் கற்றுக்கொள்ளும் கல்வி கல்வியா? நாம் படிக்கும் பாடம் பாடமா? மாணவர்கள் மாணவர்களா? ஆசிரியர்கள் ஆசிரியர்களாகவே இருக்கிறார்களா? இந்த கேள்விகளுக்கான தேடலின் விளைவே இந்த பகிர்வு. மாணவர்களை அவர்களை மதிப்பெண்கள் அடிப்படையில் தரம்பிரிப்பதில்லை மாறாக அவர்களுடைய திறமையின் அடிப்படையில் தரம்பிரிக்கப்படுகிறார்கள். அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு கல்வி கொடுக்கப்படுகிறது. 

ஒரு கல்வி நிறுவனமோ, ஆசிரியரோ அவர்களின் திறன்களைக் கண்டறியவும் அவற்றை வளர்க்கவும் உதவவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு தாங்களாகவே கற்றுக்கொள்வதற்கான திறன் இருக்கிறது. அவர்களோடு உடன்பயணித்தால்போதும் அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள்.

கற்றலிலும் கற்பித்தலிலும்; மாற்றம் நிகழவேண்டும். நம்முடைய கற்றல்முறை மாறவேண்டும் என்பதனை தன்னுடைய அனுபவத்தாலும், எடுத்துக்காட்டாலும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறார்.

தொடர்பில் கொடுக்கப்பட்ட காணொளிக்காட்சியின் சுருக்கம். தொடர்ந்து இந்த செய்தியைப் பார்க்க எங்கள் சேனலுக்கும், இணையதளத்துக்கும் வாங்க - #Veritastamil #rvapastoralcare

Add new comment

4 + 11 =