Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வாழ்த்தியதில் பிடித்தது... பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ஆவலுடன் ஆசை பொங்க
இல்லத்தில் இனிமை பொங்க
ஈகையுடன் கருணை பொங்க
உள்ளத்தில் உவகை பொங்க
ஊக்கமுடன் ஆக்கம் பொங்க
எண்ணத்தில் எழுச்சி பொங்க
ஏற்றமுடன் மாற்றம் பொங்க
ஐயம் இடும் கருணை பொங்க
ஒப்பிலா ஒழுக்கம்பொங்க
ஓங்கார ஓசை பொங்க
ஔஷதமில்லா வாழ்வு பொங்க
அஃதே அனைத்தும் பெற்று
ஆல் போல் தழைத்து
அருகு போல் வேர் ஊன்றி
வாழ்வாங்கு வாழ்க்கை பொங்க
தைத்திருநாளில் வாழ்த்துகிறேன்!
அன்பு பெருக, மகிழ்ச்சி என்றும் தங்க, செல்வம் நிலைக்க, நோய் நீங்க, முயற்சிகள் பெருக, வெற்றி என்றென்றும் உங்கள் வசமாக வாழ்த்தி ஆசி கூறுகின்றேன்.
தை... நம் அனைவருக்கும்
ஆரோக்கியத்... தை..
நலத்...................தை
வளத்.................. தை
சாந்தத்............... தை
சமத்துவத்......... தை
நட்பில் சுகத்..... தை
பந்தத்................. தை
பாசத்................... தை
நேசத்.................. தை
இரக்கத்.............. தை
உற்சாகத்........... தை
ஊக்கத்............... தை
ஏற்றத்................. தை
சுபிட்சத்..............தை
கொடுத்து...
ஆணவத்.... தை
கோபத்........ தை
குரோதத்..... தை
சுயநலத்...... தை
பஞ்சத்.......... தை
வஞ்சத்......... தை
வன்மத்......... தை
துரோகத்...... தை
அலட்சியத்... தை
அகங்காரத்... தை
எடுத்து...எல்லோரும் இனிமையாய் வாழ... அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
குன்றா நலமும்
குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும்
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ
இத் தை திருநாளில் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். அனைவருக்கும் முன்கூட்டிய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
#VeritasTamil
Add new comment