Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இந்தியாவில் மறைசாட்சியான இருவருக்கு புனிதர் பட்டப் பணி துவக்கம்
Wednesday, September 18, 2019
பிரான்ஸ் நாட்டிலிருந்து மறைபரப்பு பணிக்காக நிக்கோலஸ் மைக்கேல் கிரிக் மற்றும் அகஸ்டின் எட்டியென் பௌரி என்ற இரு அருள்பணியாளர்களும் வந்தபோது இந்தியாவில் மியாவ் மறைமாவட்டத்தில் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர்.
MEP மறைபரப்பு கழகத்தைச் சேர்ந்த இவர்கள் ஏறக்குயை 165 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்டனர். இவர்கள்தான் அருணாச்சலப் பிரதேசத்தில் முதன் முதலில் நற்செய்தி விதையை விதைத்தவர்கள்.
எனவே இவர்களை அருளாளர் மற்றும் புனிதர்கள் நிலைக்கு உயர்த்துவதற்கான பணியை மியாவ் மறைமாவட்டத்தின் புனித பேதுரு பேரலாயத்தில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கியது. மாறிவரும் காலச் சூழ்நிலையில் நாம் எப்படிப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். நம்முடைய விழுமியங்கள் தவறான வழியில் செல்பவர்களுக்கு சவாலாக இருக்கின்றதா?
Click to share
Comments
மாறிவரும் காலச் சூழ்நிலையில்
நம்முடைய விழுமியங்கள் தவறான வழியில் செல்பவர்களுக்கு சவாலாக இருக்கின்றது. குடும்பத்தில் மாமா மச்சான், அக்கா தங்கை, அண்ணன் தம்பி, உறவினர்கள் தவறான வழியில் செல்லும் போது, அதை சரிப்படுத்த முயலும் போது ஏற்றுக்கொள்ளாமை நிலை ஏற்படும்போது, விலகி செல்வதா அல்ல காத்திருப்பதா..?
Add new comment