அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றார். மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார் - விடுதலைப் பயணம் 3:14. ஆம் கடவுள் ஆதியிலே எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார். அவர் அன்பில் அணு அளவும் குறையவில்லை. இரக்கத்தில் கொஞ்சம்கூட மாற்றமில்லை.  அரவணைப்பு ,பரிவு, பாதுகாக்கும் தன்மை எதிலும் மாற்றம் இல்லை. மனம் மாறுவதற்கு அவர் மனிதன் அல்ல. சொன்ன சொல்லிலும் மாறாதவர். அவர் முதலும் முடிவும் இல்லாதவர். எல்லாப் படைப்புகளும் அவரில் அடங்கும்.    ஆதியிலே வைத்திருந்த அதே அன்பை இறுதி வரை வைத்திருக்கின்ற தேவன். எல்லாவற்றிலும்இருக்கின்றவராகவே இருக்கிறவர். 

ஜெபம்: நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக  இருக்கின்ற ஆண்டவரே காலை தோறும் உமது மாறாத அன்பையும் பகலெல்லாம் உமது  இரக்கத்தையும் நாங்கள் அனுபவிக்க  அருள் தாரும்.

Add new comment

11 + 9 =