பிறருக்காக உழைத்தால் உழைத்தவருக்கு சிலுவை, அந்த பிறருக்கு உயிர்ப்பு


Sisters

1959 ஆம் ஆண்டு தன்னுடைய மருத்துவப் படிப்பை ஸ்பெயின் நாட்டில் நிறைவுசெய்து, 1965 ஆம் ஆண்டு வட இந்தியாவின் பெர்காம்பூர் பகுதியில் மருத்துவப் பணி செய்ய வந்தவர்தான் அருள்சகோதரி எனிடினா. இவர் ஏறக்குறைய 54 ஆண்டுகள் இந்திய மண்ணில் பிறரன்பு மருத்துவப் பணிசெய்து, தன் வாழ்வின் பொன்னான நாட்களை பிறப்படுத்தப்பட்ட, தலித் மக்களின் நலனுக்காக கழித்தவர். 86 வயது நிரம்பிய இந்த அருள்சகோதரி இந்தியாவின் தங்கும் உரிமத்தைப் புதுப்பிக்க சென்றபோது. அவற்றை ரத்து செய்தது மட்டுமின்றி, இவரை 10 நாட்களின் இந்திய நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இவர் சார்ந்த புனித வின்சென்ட் தே பவுலின் பிறரன்பு புதல்வியர் சபை 1633 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் தோன்றியது. இந்த சபையில் இந்தியாவில் 14 மறைமாவட்டங்களில் 42 இல்லங்கள் வழியாக மக்களுக்கு சேவை செய்து வருகின்றார்கள். 

இந்திய மண்ணில் மீண்டும் இயேசுவின் வாழ்வுப் பாதை இச்சகோதரிக்கு நினைவூட்டப்பட்டிருக்கின்றது. மக்களின் நல்வாழ்விற்கு உழைத்ததால் இயேசுவுக்கு சிலுவை பரிசாகக் கிடைத்தது, அதே வேளையில் மக்களின் வாழ்வில் உயிர்ப்பின் நற்செய்தி உருப்பெற்றது.

அருள்சகோதரி விட்டுச்சென்ற இந்தப் பணி தொய்வடையாமல் பல மடங்கு வேகத்துடன் உருப்பெற்றிட செபிப்போம். இந்திய மண்ணில் பிறரன்புப் பணியாற்றுவதில் வரும் சவால்களைப் பற்றி சிந்திப்போம். சவால்களைச் சந்திக்க துணிவோம். இந்தப் பகிர்வு நலமானதெனத் தோன்றினால், பிறருக்கும் பகிருங்கள்.
 

Add new comment

4 + 11 =