Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மாடு கடத்தியவர்கள்மீது வழக்கு
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் மாட்டை கடத்திச் சென்ற 25 பேரை பிடித்து கயிற்றால் கட்டி 100 பசு பாதுகாப்போர் போலீஸிடம் ஒப்படைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பசு காவலர்கள் அந்த 25 பேரை மண்டியிடச் செய்து அவர்களின் காதை திருகி `கோ மாதா கி ஜெய்`(பசு அன்னை வாழ்க) என கூற வற்புறுத்தினர். போலீஸார் மாடு கடத்தியவர்கள் மீதும் அவர்களை துன்புறுத்திய பசு காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காண்டவா மாவட்டம் சாவ்லி கேடா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. கிடைத்த தகவலின் படி, 25 பேர் எட்டு வண்டியில் மாட்டை கடத்தி மஹராஷ்ட்ராவிற்கு கொண்டு சென்றபோது கிராமத்தில் வசிப்பவர்கள் அவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களை தோப்புக்கரணம் போடவைத்து கோ மாதா கி ஜெய் என முழங்க செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பசு காவலர்கள் கட்டுண்டவர்களை எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
22 கால்நடைகள் அவர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. கிராமவாசிகள் போலீஸாருக்கு தகவல் அளித்தும் போலீஸார் வராததால் மக்களே அவர்களை கயிற்றில் கட்டி ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். அவர்கள் பசுக்களை கடெகானிலிருந்து மஹாராஷ்ட்ராவிற்கு கட்த்திசென்றதாக தெரியவந்துள்ளது. கிராமவாசிகளின் கூற்றுப்படி அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லை.
கண்ட்வா மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ஷிவ்தயால் சிங், "மாட்டைக் கடத்தி சென்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அதேபோல் காவல்துறைக்கு தகவல் கூறாமல் அவர்களைப் பிடித்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக கிராமவாசிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.
கால்வா காவல்நிலையத்தின் பொறுப்பாளர் ஹரி சிங் ராவத் "22 கால்நடைகள் அவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. 25 பேர் கைதாகியுள்ளனர். அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர்" என கூறினார். கைதானவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். காவல் துறை 3 பசு காவலர்கள் மற்றும் 12 கிராமவாசிகள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
(நன்றி: பிபிசி தமிழ்)
Add new comment