மேக்ஸ் ரக விமான விபத்து : 346  பேர் இறப்பு 


BBC

இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம். அந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 346. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் படிப்பு மற்றும் மற்ற செலவுகளுக்கு அளிக்கப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை ஏற்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். இந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (பிபிசி நியூஸ்).
 

Add new comment

7 + 0 =