மனைவியைத் தேடி...


80+ [AWESOME] I Love My Wife Quotes & Images (Apr. 2018 UPDATE) Awesoroo

தமிழகத்தில் தன் மனைவி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரைத் தேடி 300 கி.மீ. தொலைவு பயணம் செய்த கணவரின் செயல் நெஞ்சை உருக்கும்விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் கும்பகோணம் அருகேயுள்ள பெரிங்காடி பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான வினயராஜ். இவர் தமது மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினருடன் கோயம்பத்தூர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வருகின்றார்.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இருவரும் தங்களின் மகளை கோவை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டுக் காரில் நரசிம்மநாயக்கன்பாளையம் திரும்பினர். காரை வினயராஜ் ஓட்டியுள்ளார். நரசிம்மநாயக்கம்பாளையப் பேருந்துநிலையம் அருகில் அவர் காரை வலதுபுறம் திருப்பியபோது கேரளாவிலிருந்து காய்கறி ஏற்றிவந்த லாரியானது காரின்மீது மோதியது. இதில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது. காரில் இருந்த சாந்தி சம்ப இடத்திலேயே இறந்தார். வினயராஜ் பலத்த காயத்துடன் உயிர்தப்பினார். மனைவியின் இறப்பு அவரை ஆழ்நத துயரத்தில் ஆழ்த்தியது.

மனைவி இழந்த அவரின் மனநலம் பாதிக்கப்பட்டது. எனவே என் மனைவி இறக்கவில்லை. நானை அவளைத் தேடிச் செல்கின்றேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறி தன் மனைவியைத்தேட ஆரம்பித்தார். 

காணாமல்போன இவரை இவருடைய குடும்பத்தார் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் இவர் கிடைக்கவில்லை. இவ்வேளையில் காணாமல் போன சாந்தியின் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் காணாமல் போன வினயராஜ் அவர்கள். உடனடியாக காவல்துறையின் மூலம் அவரைக் கண்டுபிடித்துள்ளனர்.

தன் வீட்டிலிருந்து பணம், செல்போன் என எதையும் எடுக்காமல் சென்ற வினயராஜ், 300 கி.மீ தூரம் நடந்தே தனது சொந்த ஊரான கும்பகோணத்தை அடைந்துள்ளார். அங்கு ஒரு தனியார் மருத்துவமணை ஆம்புலன்ஸின் சாரதியிடம் தன் மனைவியைத் தேடி வந்ததாகவும், அவளுக்கு போன் பண்ணவேண்டும் என்று சொல்லி அவருடைய போனை வாங்கி மனைவி நம்பருக்குப் பேசியுள்ளார். 

அவர் ஞாபக சக்தியை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியபின்பும், மனைவியின் போன் நம்பரைச் சரியாக ஞாபகம் வைத்துப் போன் பேசியது வியப்பை ஊட்டுகின்றது. அவர் தன் மனைவியின் மீது கொண்டிருந்த பற்று போற்றுதற்குரியது.
 

Add new comment

10 + 8 =