சுவிஸ் இராணுவத்தில் மூன்றாம் பாலினம்


Vegan allowed to serve in Swiss army in landmark case | The Independent The Independent

சுவிட்சர்லாந்தில்இராணுவப் பயிற்சிக்குப்பின் பெண்ணாக மாறி, மூன்றாம் பாலினத்திற்கான வாய்ப்பிற்கு வித்திடுகின்றார் கிளாடியா சபின் மியர். இவர் இராணுவ வீரர் அமைதிப்படை ஒன்றில் இணைந்து கொள்ளக்கோரி விண்ணப்பித்திருந்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெண்ணாக மாறும் அறுவைச் சிகிச்சை செய்திருந்ததால், அவர் இராணுவத்தில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்று கூறி அவருடைய மனுவைத் தள்ளுபடிச் செய்தனர்.

இராணுவம் என்பது பாலினம் சார்ந்ததல்ல, மாறாக ஆணோ பெண்ணோ அல்ல என வாதிட்ட அவரது வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இவருடைய இந்த முயற்சியினால் தற்போது ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவரையும் இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதுக் குறித்துப் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. 

எனவே வருங்காலத்தில் சுவிஸ் இராணுவத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பபடிவத்தில் நீங்கள் ஆணா, பெண்ணா, அல்லது மூன்றாம் பாலினத்தவரா என்ற கேள்வியும் இடம்பெறும் வாய்ப்புகள் உள்ளது என கருத்துப் பகிரப்பட்டுள்ளது.
 

Add new comment

1 + 0 =