பிலிபினீசின் இளம் ஆயர் 


Father Jose Rapadas, who was ordained a priest in 1999, is the youngest Filipino bishop to be named by Pope Francis. (Photo courtesy of CBCP News)

தெற்கு பிலிபினீசின் மியான்டானோவின் பகுதியில் இலியோன் மறைமாவட்டத்தை வழிநடத்துவதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 46 வயது நிரம்பிய அருள்தந்தை ஜோஸ் ரபாதாஸ் அவர்களை அம் மறைமாவட்டத்தின் ஆயராக அறிவித்தார். இவரே பிலிபைன்ஸ் ஆயர் பேரவையின் இளம் உறுப்பினராக இருப்பார். 

தந்தை ஜோஸ் ரபாதாஸ் அவர்கள் 26 பங்குகளை கொண்ட இலியோன் மறைமாவட்டத்தின்  ஐந்தாவது  ஆயர் ஆவார். ஆயராக பணியாற்றுவது மாற்றாரு  சவால் என்று கூறினார். திருத்தந்தை தன் மீது கொண்டுள்ள நம்பிக்கை தனக்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தருகின்றது என்றும் கூறினார்.

இவர்  ஜூன் 12, 1972 அன்று மணிலாவின் டோண்டோ மாவட்டத்தில் பிறந்தார். ககாயன் டி ஓரோ நகரத்தில் உள்ள செயின்ட் ஜான் வியன்னி இறையியல் குருமடத்தில் தனது படிப்பை முடித்த பின்னர் 1999 இல் அருள்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
 

Add new comment

12 + 4 =