உயிர் குடிக்கும் வெயில்


https://cdn.thewire.in/wp-content

வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்குதலுக்கு இந்தியாவில் பீகார் மாநிலத்தில்  3 மாவட்டங்களில் மட்டும் ஏறக்குறைய 56 பேர் பலியானதாக தகவல்கள் வருகின்றன.

தென்மேற்கு பருவ மழை தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு இதுவரை 56 பேர் பலியாகி உள்ளதாகவும், இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கயா மாவட்டத்தில் 19 பேரும், நவாடா மாவட்டத்தில் 7 பேரும் பலியாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add new comment

12 + 2 =