உலக வங்கி தகவல் - தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் முதல் இடம் பிடித்த நாடு


தாய்நாட்டிற்கு பணம் அனுப்பும் இந்தியர்கள்

வெளிநாடுகளில் இருந்து தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர்.

இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடந்த ஆண்டில் மட்டும் 79 பில்லியன் டாலர் பணம் அனுப்பி உள்ளனர்.

இந்தியாவைத் தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது வெளிநாடுகளிலுள்ள சீனர்கள் தாய்நாட்டிற்கு 67 பில்லியன் டாலர்கள் அனுப்பி உள்ளனர்.

மெக்சிகோ 36 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் பிலிப்பைன்ஸ், 34 பில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்திலும் எகிப்து 29 பில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து வெளிநாட்டில் பணியாற்றும் மக்கள் 2018 ஆம் ஆண்டு மட்டும் 131 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணம் தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

அது மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு பணம் வருவது கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
 

 

Add new comment

2 + 7 =