Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சுவிட்சர்லாந்தில் கல்வி - வாய்ப்பும் எச்சரிக்கையும்
இலங்கை மற்றும் இந்தியா போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து அங்கேயே வேலையை பெற்றுக் கொள்வது சாத்தியமா என்பதை விளக்குகிறது இந்த செய்தி.
சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களான சுவிஸ் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு வேலை உரிமத்திற்காக சிறப்பு பிரிவுகளைஏற்படுத்தும் முறைமையை கைவிட கோரி வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்ட சுவிஸ் நாடாளுமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.
வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்வியை மட்டும் அளித்துவிட்டு, அவர்களுக்கு வேலை இல்லாத ஒரு சூழலை உருவாக்குவதை தவிர்க்கும் நல்ல எண்ணத்தின் பேரில் அந்த வாக்கெடுப்புக்கு நாடாளுமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.
தற்போதைய விவரப்படி சுவிஸ் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் ஐரோப்பிய ஒன்றியஞத்தாரல்லாத நாடுகள் நாடுகளை சேர்ந்த மாணவர்களில் 10 முதல் 15 சதவீகிதத்தினர் மட்டுமே சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து வாழ்கிறார்கள். அது ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத இலங்கை இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் வேலை கிடைப்பது கடினம் என்பது தான்.
வேலை தேடுவதில் காலம் கடந்து செல்ல, விசா முடியும் தருவாயில் மீண்டும் ஆறு மாதம் விசா நீட்டிப்பு கோரி விண்ணப்பித்திருக்கிறார் ஹரிஷ். அப்போது அவரது விசா B ( resident) உரிமைலிருந்து L ( short time ) உரிமையாக மாற்றப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவர் வேலை தேடி சென்ற இடங்களில் எல்லாம் அவரது தற்காலிக உரிமம் காரணமாக வேலை மறுக்கப்படுகிறது.
வேலை வழங்குவோர் அவருக்கு B B உரிமம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க அவருக்கு வேலைவாய்ப்பு சிக்கலான ஒன்றாகிவிட்டிக்கிறது. பல பகிராத முயற்சிகளுக்குப் பின்னும் வேலை எட்டாக்கனியாகவே சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறி இருக்கிறது.
தற்போது மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தான் கற்ற கல்விக்கு சம் சம்பந்தமில்லாத ஒரு வேலையை செய்து வரும் ஹரிஷ், சுவிட்சர்லாந்து ஒன்றியத் தாரல்லாத ஐரோப்பிய மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு பிரிவு க்கெதிரமான மசோதாவை(quota system for non EU student) உடனடியாக சட்டமாக்க வேண்டும் என்கிறார்.
அப்படி செய்வது ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மாணவர்கள் சுவிட்சர்லாந்தில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதை எளிதாகும் என்கிறார் ஹரிஷ். அத்துடன் ஐரோப்பிய மாணவர்கள், உள்ளூர்மொழிகளை(ஜெர்மன், பிரெஞ்சு) கற்றுக் கொள்வது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.
Add new comment