Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
யார் நீ? | ஜோசப் ஜெயராணி
பெண்மையை போற்றும் விதத்தில் பெண்களுக்கான சிறிய கவிதை
கல்வி, செல்வம், வீரம் என உன்னை
அடையாளப்படுத்த முனையும் கோட்பாடுகள் ஒருபக்கம்!
அருவி, நதி, கடல், மலர், நிலா என உன்னை
வர்ணிக்க நினைக்கும் புலவர் கூட்டம் மறுபக்கம்!
மங்கை, மடந்தை, அறிவாய், பேதை என
உன் வாழ்நாளைப் பிரித்துப் பார்க்கும் மூத்தோர் கூட்டம் ஒருபக்கம்!
மகள், மனைவி, தாய், மாமியார், மருமகள் என்று குடும்ப உறவைக் காட்டி
அடையாளப்படுத்த முனையும் மாந்தர் கூட்டம் மறுபக்கம்!
அப்படியெனில் உன் பார்வையில் பெண்ணே நீ யார்?
வீடு இல்லமாகிறது உன்னால் தான்
- காரணம் உறவிற்கு உரு கொடுக்கும் உன்னதக் கடவுள் நீ!
குடும்பம் கோவில் ஆவதும் உன்னால் தான்
- காரணம் மெழுகாக நீ உருகி இருந்து உரமூட்டுவதால்!
உணர்வுப் பூர்வ உறவுகள் மலர்வதும் உன்னால் தான்
-காரணம் உப்பாக நீ இருந்து உரமூட்டுவதால்!
கனவுகளை நனவாக்க காலச்சக்கரமாய் இயங்க முடிவதும் உன்னால்தான்
- காரணம் பொறுமையும், கடமையும் உன்னிடமிருப்பதால்!
மறந்திடாதே,
மலையின் சிகரம் போன்றது உன்சக்தி!
ஆழ்கடலின் ஆழம் போன்றது உன்சக்தி!
செங்கதிரவனின் நடுமையம் போன்றது உன்சக்தி!
காற்றின் வேகம் போன்றது உன்சக்தி!
எழுத்து
ஜோசப் ஜெயராணி
Add new comment