Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கலங்காதே நெஞ்சமே
ஆறுதல் அளிக்கும், உற்சாகமூட்டும், கடவுளின் பிரசன்னத்தை நம் உள்ளத்தில் இல்லத்தில் கொணரும் அளவிற்கு அருமையான இப் பாடலை நமக்காக உருவாக்கியவர் ஜாய் இன்பென்ட் அவர்கள்.
பல்வேறு வேலைகள் மத்தியிலும், திருப்பாடல் 120 வாசித்து, தியானித்து அதற்கு எளிய சொல்வடிவம் கொடுத்து, பண், இசை அமைத்து நமக்கு தந்திருக்கிறார். உங்கள் பாராட்டுகளையும், பரிந்துரைகளையும் கொடுங்கள். அவருக்காக இறைவனிடம் மன்றாடுங்கள். நமது வேரித்தாஸ் தமிழ்ப் பணிக்கு அவர் பணி தொடரட்டும்.
கலங்காதே நெஞ்சமே
உலகை மீட்ட தேவன் உன்னுடனே
கலங்கிடாதே கலங்கிடாதே கலங்கிடாதே என் நெஞ்சமே நீ
இருளும் புயலும் எனை சூழும் பொழுது
அருளும் அன்பும் பொழியும் இறைவன் என்னுடனே - 2
வாழ்வில் வீழ்ந்து வருந்தி வாடும்போது
தேவன் நிழலில் இருப்பேன்
நிழலில் இருப்பேன்
கலங்கிடமாட்டேன் கலங்கிடமாட்டேன்
கலங்காதே நெஞ்சமே
உலகை மீட்ட தேவன் உன்னுடனே
கலங்கிடாதே கலங்கிடாதே கலங்கிடாதே என் நெஞ்சமே நீ
Music, Arrangements & Lyrics - Joy Infant J
Twitter : http://twitter.com/VeritasTamil
Instagram: http://instagram.com/VeritasTamil
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
Website :http://www.RadioVeritasTamil.org
Blog: http://tamil.rvasia.org
Add new comment