இதில் எதற்கும் தீர்வு உண்டு

இந்திய ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் கீழ் ஹோமியோபதி மருத்துவம் இயங்குகின்றது. உள்நாட்டு மாற்று மருந்து முறைகளின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பரப்புதல் ஆகியவரை நோக்கமாக கொண்டு இந்த அமைச்சகம் செயல்படுகிறது. ஹோமியோபதி மட்டும் இன்றி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த போன்ற பிற மாற்று மருத்துவ முறைகளும் இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன.

கொரோனா தொற்றுநோயின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த நாட்களில், மக்கள் ஆங்கில மருத்துவத்தையே சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் ஹோமியோபதி மருத்துவத்திலும் அதற்கான தீர்வுகள் இருக்கின்றன. அதனை குறித்து நம்முடன் உரையாடுகிறார் டாக்டர் பூவேந்தன் அவர்கள்.

டாக்டர் பூவேந்தன் அவர்கள், தூத்துக்குடியில் 1985 ஆண்டு பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை முடித்தவுடன், தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் ஹோமியோபதி கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். குழந்தை மருத்துவத்தில் முதுகலை படிப்பை முடித்து விட்டு தற்போது ஹோமியோபதி மருத்துவராக மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அயராது உழைத்து வரும் இவர், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஹோமியோபதி மருத்துவம் மூலம்  கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசிடம் இருந்து அனுமதியும் பெற்றுள்ளார்.

Add new comment

2 + 6 =