அன்பருடன் அதிகாலைத்துளிகள்

அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; திருப்பாடல்கள் 1:2. நாம் தினமும் விவிலியம் வாசிக்க வேண்டும். அதன் மூலமாக ஆண்டவர் நம்மோடு பேசுகிறார்.  அறிவுரை கூறுகிறார். வாக்குத் தத்தங்கள் தருகிறார். அவரது அன்பை பற்றி நமக்கு புரிய வைக்கிறார்.  நாம் நடக்க வேண்டிய பாதையை நமக்கு காட்டுகிறார்.  

ஆனால் நாம் விவிலியத்தை எப்படி வாசிக்கிறோம்.  ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் படிப்போம். ஒன்றுமே மனதில் நிற்காது .ஒன்றுமே புரியாது. அவ்வளவு வேகம்.  இல்லையென்றால் விவிலியத்தை தொட்டு முத்துவதோடு சரி.

நாம் பைபிளை நிதானமாக படித்து, அதை பற்றி சிறிது நேரம் மௌனமாக அமர்ந்து தியானிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொடுக்கும்.  பின் ஆண்டவர் நம்மோடு பேசுகிற வார்த்தைகள் நம் செயல்களில் பிரதிபலிக்க வேண்டும். அதன்படி நாம் வாழ வேண்டும்.

ஆண்டவர் கூறுகிறார், என்னுடைய வார்த்தைகளில் மகிழ்ச்சியுற்று, அவற்றை பற்றி இரவும் பகலும் சிந்திபவர் நீரோட்டமுள்ள இடத்தில் வளரும் மரமாக செழித்து, ஏற்ற காலத்தில் மிகுந்த பலனை தருவார்கள் . எல்லாவற்றிலும் வெற்றி காண்பார்கள்.  இந்நாளில் அது தோல்வியாக பிறர் கண்களில் தெரிந்தாலும் ஆண்டவர் அதை ஜெயமாக மாற்றுவார். 

ஜெபம்: அன்பு ஆண்டவரே நாங்கள் உம் வார்த்தைகளை படித்துப் அவற்றை பின்பற்றி எங்கள் வாழ்வில் அவற்றை தீபமாக கொண்டு வாழ ஆவியின் அருள் தாரும். வழி நடத்தும்.

Add new comment

4 + 7 =