உலக நிகழ்வுகள்

நம்முடைய உள்ளத்தை வருடும் உண்மைச் செய்தி, வாழ்விற்கான வழிகாட்டுதல்.

1. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோன நோயின் பிடியில் இருக்கும் அமேசான் பகுதி மக்களுக்கு தூய ஆவியார் சக்தியை கொடுக்க வேண்டும் என ஜூன் 2 ஆம் தேதி தனது ட்விட்டர் செய்தியின் வழியாக இறைவனை வேண்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். மே மாதம் 31 ஆற்றிய நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உறையில், கொரோன தோற்று நோயினால் பாதிக்கப்பட்ட அமேசான் பகுதிக்காக ஜெபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ரோம் நகரில், தெருவோரங்களில் வாழும் ஏழை மக்களுக்காக மருத்துவ உதவி ஊர்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெந்தகொஸ்தே பெருவிழா அன்று அர்பணித்துள்ளார். இது கர்தினால் கொன்ராட் க்ரஜெவ்ஸ்கி அவர்களின் கண்காணிப்பின்கீழ் செயல்படும் பாப்பிறை பிறரன்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்தியுடன் சேர்ந்து, ஏழை மக்களுக்கு என இயங்கும் நடமாடும் மருத்துவமனை, புனித பேதுரு வளாகத்தில் இயங்கும் இரக்கத்தின் அன்னை முதலுதவி சிறு மருத்துவமனை ஆகியவையும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

3. கறுப்பின படுகொலையால் அமெரிக்கா நாடே வன்முறைக்கு ஆளாகியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வு சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மிநீயாபொலிஸ் நகரில் உள்ள ஒரு சிறிய கத்தோலிக்க ஆலயம், வன்முறைக்கு அஞ்சி தங்கள் வீடுகளில் வாழும் மக்கள், இந்த ஆலயத்தில் வந்து தாங்கிக்கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறது. வாலன்டியர்ஸ் ஆப் அமெரிக்கா என்ற இயக்கத்தின் கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

4. ஜூன் 2  அன்று, சிகாகோ நகரில், கறுப்பின படுகொலையினால் நாடெங்கும் வன்முறையின் பிரதிபலிப்பாக, கன்னியர்களால் நடத்தப்பட்டு வரும் ஒரு புத்தக கடை நாசம் செய்யப்பட்டுள்ளது. வன்முறையாளர்கள், இந்த கடையின் கண்ணாடிகளை உடைத்தும், பொருட்களை திருடியும் சென்றுள்ளனர். இதைப்பற்றி அந்த கன்னியர்கள் கூறுகையில், "இந்த வன்முறையின் மூலம், காயம் அடைந்த கலாச்சாரத்தை சீர்திருத்துவதே எங்கள் மறைப்பணி என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம்" என்றார்கள்.

5. புதிதாக உருவாகி உள்ள நிசர்கா புயல் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், "இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் உருவாகி உள்ள புயலால் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் நலமுடன் இருக்க பிராத்திப்போம். அந்த பகுதி மக்கள் போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார். இந்த நிசர்கா புயலானது, அரபிக் கடலில் உருவாகியுள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அது புயலாக மாறியுள்ளது.

6.  ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கறுப்பின படுகொலையினால் நிகழும் போராட்டத்தினால் அமெரிக்காவில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், யூடுயூப் மற்றும் கூகுள் எப்போதும் இன சமத்துவத்திற்கு ஆதரவாக இருக்கும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

7. பேஸ்புக், சரிகமப என்ற நிறுவனத்துடன், புதன்கிழமையன்று உலகளாவிய உரிமை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதனால், இந்த இசை நிறுவனத்தின் அனைத்து இசையும் பேஸ்புக்கிலும் அதன் வீடியோ பகிர்வு  தலமான இன்ஸ்டாகிராமிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Add new comment

9 + 4 =