வேண்டுவதற்கு முன்னமே கட்டளை இடுபவரே

நீ வேண்டுதல் செய்யத் தொடங்கிய போதே கட்டளை ஒன்று பிறந்தது; நான் அதை உனக்குத் தெரிவிக்க வந்தேன்; ஏனெனில் நீ மிகுதியான அன்புக்கு உரியவன்; ஆதலால் நான் சொல்வதைக் கவனித்து காட்சியின் உட்பொருளை உணர்ந்துகொள். தானியேல் 9:23 ஆண்டவர் நாம் ஒரு வேண்டுதலை கடவுள்கிட்ட கேட்கணும் என்று ஜெபிக்க தொடங்கும் போதே அந்த ஜெபத்தை கேட்டு கட்டளை விட்டு விடுவார். அவர் எல்லாம் தெரிந்தவர். அந்த வேண்டுதலால் நமக்கு நன்மையா தீமையா என அறிந்து சில சமயம் சிறுது காலம் தாழ்த்துவார். இல்லை வேறு ஒன்றை கொடுப்பதன் மூலம் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார்.

ஆண்டவரை அதிகமாக தேடுபவர்கள், அவரை அதிகமாக நேசிப்பவர்கள் அதிக துன்பங்களை அனுபவிப்பார்கள். வெளியே பார்த்தால் நமக்கே கஷ்டமாக இருக்கும். அவ்வளவுக்கு துன்பத்தை அனுபவிப்பார்கள். ஆனால் அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்கு தப்பிபோக கடவுள் வழிகளை காட்டுவார். உதவிக்கரங்களை நீட்டுவார். அந்த நேரத்தில் இவங்க எப்படி நமக்கு உதவி செய்தார்கள் என ஆச்சரியப்படும் நபர்கள் மூலம் கூட உதவி கிடைக்கும். ஆண்டவரது இரக்கங்கள் அத்தனை இன்பமானது. அதை நினைச்சுப் பார்த்தால் நம் ஊன கண்களுக்கு வியப்பாக இருக்கும்.

ஜெபிப்போம்: ஆண்டவரே நாங்கள் வேண்டுவதற்கு முன்னமே எங்களுக்கு கட்டளை இடுபவரே உமக்கு நன்றி. உம்மை துதிக்கிறோம். உம் செயல்கள் ஆச்சர்யமானவை. அதிசயமானவை. எண்ணி பார்க்க முடியாதவைகளை செய்பவரே உமக்கு நன்றி. ஆமென்.

Add new comment

11 + 3 =