வெற்றி வழி

அப்போது அவர் சொன்னது, “என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வெற்றி அளித்தருளும். என் தலைவர் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும் - தொடக்க நூல் 24:12. ஆபிரகாம் எலியேசரை அழைத்து தன் மகன் ஈசாக்குக்கு உறவினர் வீட்டுக்கு சென்று பெண் கொண்டு வருமாறு சொல்கிறார். எலியேசருக்கோ இது எப்படி  முடியுமோ என்று ஒரு தடுமாற்றம். எலியேசர் ஈசாக்குக்கு பெண் பேச செல்லும் முன், எனக்கு இன்று வெற்றி அளித்தருளும் ஆண்டவரே என்று ஜெபித்து தன் பயணத்தை தொடங்குகிறார்.  

ஆண்டவர் அவருடைய பயணத்தை வெற்றியாக மாற்றுகிறார். வீடு செல்லும் முன் வழியிலேயே ரெபேக்கா தம் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வருவதை அவர் பார்க்கிறார். அவர் வீட்டில் தந்தையிடம் சென்று பேசுகிறார். தன்னோடு அழைத்து வருகிறார். ஈசாக்கின் மண வாழ்வு சிறப்பாக அமைகிறது. ஆம் நாமும் ஒரு செயலை செய்ய தொடங்கும் முன் ஜெபித்து விட்டு தொடங்கினால் அதற்கு எதிராக இருக்கும் எல்லா தடைகளும் நீங்கி அந்த காரியம் வெற்றியாக முடியும். ஆண்டவர் தன் தூதர்களை அனுப்பி எல்லாவற்றையும் அதனதன் நேரத்தில் சிறப்பாக முடிப்பார். 

ஜெபம்: ஆண்டவரே வெற்றியை கொடுப்பவரே உமக்கு நன்றி. ஆண்டவரே எங்களுடைய, படிப்பில், தொழிலில், குடும்ப வாழ்வில், பொது வாழ்வில், ஆன்மீக வாழ்வில், எங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் நாங்கள் உம்மை தேடுகிறோம். அப்பா எங்களோடு இருந்து நாங்கள் முன்னெடுக்கும் எல்லாவற்றையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  ஆமென்.

Add new comment

1 + 4 =