விண்ணரச அடைவதற்கான வழி என்னனு தெரிஞ்சிக்கலாமா?

இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார் - மத்தேயு 4:17. புனித மத்தேயு நற்செய்தியின்படி இயேசு ஞானஸ்தானம் பெற்று அலகையால் சோதிக்கப்பட்ட பிறகு மக்களுக்கு கொடுத்த முதல் பிரசங்கம் இது தான். மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது. அவர் நிறைய இடங்களில்  கடுகு விதை, நல்ல முத்து, கடலில் வீசப்பட்ட வலை, மகனுக்கு  விருந்து ஏற்பாடு செய்த அரசன் என பல உவமைகள் மூலமாக விண்ணரசை பறைசாற்றி கூறினார்.

அவர் நம்மை விண்ணரசுக்கு உரிமையாளர் ஆக்கவே விரும்புகிறார். பிள்ளைகளே மணம் திரும்புங்கள். உலக மாயைகளில் மயங்கி கிடக்காமல் ஆண்டவராகிய என்னை தேடுங்கள் என்கிறார். இயேசு பன்னிரு சீடர்களையும் அனுப்புகையில்  விண்ணரசு நெருங்கிவிட்டது என அறிவியுங்கள் என்றார். ஆகவே இயேசுவின் விருப்பம் என்னவென்றால் நாம் மனம் திருந்தி ஆயத்தமாய் இருந்து விண்ணரசுக்கு நம்மை உரிமையானவர்களாக்கி கொண்டு அங்கு பிதாவோடும் தூய ஆவியானவரோடும் ஒன்றித்து இருக்க வேண்டும் என்பதே.

ஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. உம்மை துதிக்கிறோம்.  இந்த மனித வாழ்வின் இலக்கு விண்ணரசை அடைவதே என்பதை உணர்ந்து உமக்கேற்ற வாழ்வு வாழ தூய ஆவியின் அருளை எங்களுக்கு தாரும். ஆமென்.

Add new comment

15 + 0 =