வாயில்லா உயிர்களின் இறைப்பணி

காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார் - 1 அரசர்கள் 17:6. ஆண்டவர் சில நேரங்களில் விலங்குகள் பறவைகள் இவற்றை  உதவி செய்ய பயன் படுத்தி இருக்கிறார்.  அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

நோவா காலத்தில் வெள்ளம் வடிய தொடங்கிய போது அவர் புறாவை வெளியே அனுப்பினார். அது ஒரு ஒலிவ இலையுடன் திரும்பி வந்தது. அதை வைத்து வெள்ளம் வடிய ஆரம்பித்து விட்டது என்ற நல்ல செய்தியை அவர் அறிந்தார்.

பிலயாம் ஆண்டவர் வார்த்தையை மீறி செல்லும் போது கழுதை அவரது பாதையை மூன்று முறை தடுத்தது. பிறகு கழுதை வாய் திறந்து பேசி அவரது தவறை உணர வைத்தது  

காகம் எது கிடைத்தாலும் அது எல்லா காகத்தையும் கூப்பிட்டு சாப்பிட பார்க்கும். ஆனால் பஞ்ச காலத்தின் நாட்களில் ஆண்டவர் எலியாவுக்கு காகம் மூலமாக இரண்டு வேளை அப்பமும் இறைச்சியும் கொடுத்து அவருடைய பசியை  ஆற்றினார்.

திமிங்கலம் வாயினுள் போகிற மனிதன் அதன் கழிவாக தான் வெளியே வருவான். ஆனால் இறைவாக்கினர் யோனாவை முழுங்கிய திமிங்கலம் பாதுகாப்பாக நினிவே கடற்கரையில் கொண்டு வந்து உமிழ்கிறது.வழி காட்டியது. நினிவே மக்களுக்கு பாவத்திலிருந்து மீட்பு கிடைக்கிறது.

சேவல் கூவும்முன் மும்முறை மறுதலிப்பாய் என ஆண்டவர் கூறிய வார்த்தையின்படி சேவல் கூவியதும் பேதுரு தன் தவறை உணர்ந்து மனங்கசந்து அழுது மன்னிப்பு தேடினார். மரியின் மைந்தன் இயேசு கழுதைகுட்டியான மறியின் மீது வரும்போது மக்கள் எல்லோரும் குருத்துக்ககளை ஏந்தி ஓசான்னா என்று பாடி ஆர்ப்பரித்தனர். 

நாம் புறாவை போன்று பிறருக்கு நல்ல செய்தி சொல்கிறோமா? கழுதையை போன்று தவறான வழியே செல்பவரை தடுத்து நிறுத்துகிறோமா? காகத்தை போன்று பசித்தவருக்கு உணவு கொடுகிறோமா? திமிங்கலத்தை போன்று பிறரை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்க்கிறோமா? சேவலை போன்று தவறை சுட்டிக்காட்டி திருத்துகிறோமா? கழுதையை போன்று ஆண்டவரின் பவனியில் ஆண்டவரை சுமந்து செல்கிறோமா? சிந்திப்போம்.

செபம்: ஆண்டவரே, எங்களோடு இரும். எங்கள் வாழ்க்கையில், நற்செய்தி சொல்பவர்களாக, தவறியவரை நல்வழி படுத்துபவர்களாக, பசித்தவருக்கு உணவு கொடுப்பவர்களாக, தவறை சுட்டிக்காட்டி திருத்துபவர்களாக, மொத்தத்தில் உம்மையே சுமந்து செல்பவர்களாக எங்களை பயன்படுத்தும். நன்றி ஆண்டவரே. ஆசீர்வதியும். ஆமென்.

Add new comment

8 + 0 =