ரசிகனா? சீடனா?

நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார் - யோவான் 13:35. ஆண்டவர் நாம் அவருடைய சீடராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். நாம் பல நேரங்களில் அவருடைய ரசிகராக மட்டுமே இருக்கிறோம். இயேசு ஊர் ஊராக சென்று புதுமைகள். செய்தார், பிரசங்கங்கள் பண்ணினார். உவமைகள் வாயிலாக பேசினார். மரித்தவரை உயிர்த்தெழ செய்தார். அதை பார்த்த அனைவரும் அதை ரசித்தார்கள். ஆனால் ஒரு சிலரே அவருடைய வார்த்தைகளின் படி நடந்து இயேசுவை பின் பற்றினார்கள். அவர்கள்  அவருடைய சீடர்கள் ஆனார்கள். 

கோவிலுக்கு வருகிறோம்.  சாமியார் நல்ல பிரசங்கம் பண்ணினார். பாடகர் குழு  நன்றாக பாடினார்கள். ஆராதனை சிறப்பாக இருந்தது என ரசித்து விட்டு வீட்டுக்கு வந்ததும் கேட்ட இறை வார்த்தைகள், பங்கு பெற்ற ஆராதனை எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். அப்பொழுது நாம் வெறும் ரசிகர்களே. நாம் சீடனாக இருந்து இருந்தால் இறை வார்த்தை மனதில் ஆழமாக பதியும்.  ஆராதனையில் இறை பிரசன்னம் நம்மை தொடும். நம் வாழ்வு மாறும். யேசுவை  போல வாழ முயற்சிப்போம். அவர் கட்டளைகளை பின்பற்றுவோம். பிறரை அன்பு செய்வோம். அன்பை பகிர்வோம்.  இனிமேல் சீடனாக இருக்க முயற்சி செய்வோம் 

ஜெபம்: அன்பு ஆண்டவரே, நாங்கள் ரசிகர்களாக அல்ல உம் சீடராக வாழ விரும்புகிறோம். எங்கள் அக கண்களை திறந்து விடும். உம்மை காணவும், உம் குரல் கேட்கவும், உம்மோடு பேசவும், உம்  வழி நடக்கவும், உம் சித்தம் செய்யவும் அருள்தாரும். ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.

Add new comment

9 + 6 =