யார் ஏற்புடையவர் ?

வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார் - லூக்கா 18:13. பரிசேயர், வரிதண்டுபவர், இருவர் ஜெபிக்க செல்கிறார்கள். பரிசேயர் ஜெபிக்கவில்லை. நான் அவனை போல இல்லை இவனை போல இல்லை.  நோன்பிருக்கிறேன், காணிக்கை கொடுக்கிறேன், அப்படி செய்கிறேன், இப்படி செய்கிறேன் என தன்னை தானே புகழ்கிறார். 

வரிதண்டுபவரோ வெகுதொலைவில் நிற்கிறார். தன் பாவத்தை உணர்கிறார். வருந்தி அழுகிறார். மார்பில் அடித்து கொண்டு வானத்தை நிமிர்ந்து பார்க்க கூட அஞ்சி தன்னை தாழ்த்தி ஆண்டவரே பாவியாகிய என் மீது இரங்கும் என்கிறார். வேறு எதுவும் அவர் ஜெபிக்கவில்லை. பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார் என இயேசு சொல்கிறார்.  

ஒருவன் தன்னை பாவமில்லதவன் என்று சொன்னால் அவன் பொய்யன் ஆகிறான். பாவி என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இறை சமூகத்தில் அறிகையிட வேண்டும். அப்போது கடவுள் நம்மை தமக்கு ஏற்புடையவராக்குவார். 

ஜெபம்: ஆண்டவரே நான் பாவி என்று ஏற்று கொள்கிறேன். என் சொல்லாலும் செயலாலும் சிந்தனையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். உம் பிள்ளை என அழைக்கப்பட தகுதி அற்றவன் ஆனேன்.  என்னை மன்னியும்.  என்னோடு இரும்.உமக்கு ஏற்புடைய வாழ்வு வாழ அருள் புரியும். ஆமென்.

Add new comment

1 + 0 =