யார் எப்படி பெரியவர் ?

தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது - லூக்கா 22:34. ஆண்டவர் இறுதி இரவில், இடையில் துண்டை கட்டி கொண்டு சீடர்கள் ஒவ்வொருவர் பாதங்களையும் கழுவினார். கடவுளின் மகன், உலகுக்கெல்லாம் அரசர், உன்னதர் தன்னை தாழ்த்தி பணியாளன் செய்யும் இந்த செயலை செய்தார். அவர் நம்மை பார்த்து சொல்கிறார் நீங்கள் உங்களுக்குள் யார் பெரியவர் என சண்டை போடலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். 

நான் என்ற அகந்தையோடு வாழ கூடாது. கணவன் மனைவி, சகோதரர்கள், உறவுகள், நண்பர்கள், என எல்லா இடங்களிலும் 'நான் பெரியவன்' என்ற எண்ணம் மறைந்தாலே அங்கு அன்பு, இரக்கம், சமாதானம் நிறைந்து விடும். ஒற்றுமை நிலவும், கடவுளின் அரசு அங்கு செயல்படும். இதையே கடவுள் விரும்புகிறார். 

ஜெபம்: ஆண்டவரே உம்மை போற்றுகிறோம். எங்களில் நான் என்ற அகந்தை மறைந்து பிறருக்கு உதவி செய்யும் பணியாளராக அன்பு, சமாதானம், சகோதரத்துவத்தை நாங்கள் பூமியில் விதைக்க அருள் தாரும். ஆசீர்வதியும். ஆமென்.

Add new comment

3 + 5 =