யாருக்கு துன்பம் வராது?

இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார் - லூக்கா 19:44. ஆண்டவர் இயேசு இறைவன் தங்கியிருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் கோவிலை கள்ளர் குகை ஆக்காதீர்கள் என்று கூறுகிறார். நாமும் அவர் தங்கும் கோவிலாக இருக்கிறோம்.  ஆவியானவர் நம் உள்ளத்தில் வாசம் செய்கிறார்.  

கோபம், பழிவாங்கும் எண்ணம், பொறாமை,  எரிச்சல், பொய், களவு, தவறான நடத்தை, தீய எண்ணங்கள் போன்றவற்றால் நம் உள்ளத்தை கள்ளர்களின் குகை ஆக்கிவிடுகிறோம். ஆகவே இயேசு எப்படி வியாபாரிகளின் அடித்து விரட்டினாரோ, அது போன்று நம்மை சில துன்பங்கள் மூலமாக தூய்மை ஆக்க விரும்புகிறார். அவர் குடியிருக்கும் கோவிலாக எப்போதும் நம் உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்க முயல்வோம். 

தாவீது ராஜா தவறு செய்த போது, அந்த தவறின் மூலமாக பிறந்த மகனை கடவுள் ராஜாவிடமிருந்து பரித்துக்கொண்டார். ஆனால் தாவீது ராஜா முணு முணுக்கவில்லை. அதை தனக்கு கிடைத்த தண்டனையாக கருதி  ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு தாவீது ராஜாவுக்கு கடவுள் கொடுத்த குழந்தை தான்  சாலமோன் ராஜா. ஆண்டவர் அவர் மீது அன்பு கொண்டிருந்தார். நம் அப்பா நம்மை நல்வழிப்படுத்த தானே தண்டிப்பார். அவர் நம்மை அதிமாக நேசிக்கிற கடவுள் அல்லவா? நம்முடைய பரிசுத்த வாழ்வை விரும்புகிற தந்தை அல்லவா?

ஜெபம்: அன்பின் நேசரே, அப்பா உம்மை நாங்கள் அன்பு செய்கிறோம். நீர் தங்கும் ஆலயமாக எங்களை மாற்றும். ஒரு போதும் உம்மை விட்டு விலகாது உம்மோடு இணைந்து இருக்கும் திராட்சை கோடியாக மிகுந்த பலன் தர அருள் தாரும். ஆசீர்வதித்து வழி நடத்தும். நன்றி. ஆமென்.

Add new comment

13 + 5 =