யாருக்குள் யார்?

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் - யோவான் 15:7. ஆண்டவர் நாம் அவருக்குள்ளும் அவருடைய வார்த்தைகள் நமக்குள்ளும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எந்த சூழ்நிலையிலும் அவரை விட்டு பின் வாங்கி போக கூடாது.  

சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமைமிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது  உறுதியான நம்பிக்கை.

அசைக்க முடியாத அளவு அவருக்குள் நாம் நிலைத்திருப்பதால் அவருடைய வார்த்தைகளை நம்புகிறோம். அவருடைய வார்த்தைகள் நம்மை செயல் படுத்தும்  ஆகவே நாம் எல்லா துன்பத்தையும் தாங்கி, தாண்டி வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்.

ஜெபம்: ஆண்டவரே உம் அன்புக்காக நன்றி. எந்த ஒரு நிகழ்வும் என்னை உம்மிடமிருந்து பிரித்துவிடாது காத்து, உம் வார்த்தையின் படி நாங்கள் வாழ அருள் தாரும்.  ஒவ்வொரு நொடி பொழுதும் எங்களோடு இரும் ஆண்டவரே.  இன்னும் அதிகமாக எல்லாவற்றிலும் உம்மை முன் வைத்து வாழ அருள் புரியும். ஆமென்.
 

Add new comment

5 + 2 =