மொத்தத்தின் நிறைவு இதில்தானே

அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: ‘தந்தையே, உமது பெயர்  தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! - லூக்கா  11:2. இயேசு கற்றுத் தந்த இந்த ஜெபத்தை இன்று நாம் உணர்ந்து சொல்லுவோமா. இந்த ஜெபத்தில் முதல் பகுதி, கடவுளை போற்றி அவருடைய ஆட்சியை வேண்டுகிறோம். கடவுள் எங்கேயும் இல்லை நம் கூடவே இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. அவருடைய நாமத்தை மகிமை படுத்துகிறோம். அப்பா உங்க பெயர் புனிதமானது. விண்ணில் நடக்கிற அதே நீதியான ஆட்சி பூமியெங்கும் செயல்படவேண்டும் என வேண்டுகிறோம்.  

அடுத்த பகுதியில் எங்களுக்கு தேவையான அன்றாட உணவை  நாள்தோறும் எங்களுக்குத் தாரும் என்கிறோம். இதில் வெறும் உணவு மட்டும் அல்ல. நம் அன்றாட வாழ்வுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் அடங்கும். ஒவ்வொரு நாளும் அடிப்படைத் தேவைகளை சந்திக்கச் முடியாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

நமக்கு  எதிராகக் குற்றம்  செய்வோரை நாம் மன்னிக்கும் அளவுக்கு எங்கள் பாவங்களை மன்னியும் என்கிறோம். அப்படியென்றால் நாம் பிறருடைய குற்றங்களை மன்னித்தால் மட்டுமே நம் பாவங்கள் மன்னிக்கப்படும். நமக்கு ஏற்படும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்த கூடாது என ஜெபிக்கிறோம். தீயவர்களிடமிருந்தும், மோசமான ஊடகங்களிடம் இருந்தும், தீய பழக்க வழக்கத்தில் இருந்தும் எங்களை விடுவித்தருளும் என்று விரும்புகிறோம்.

இந்த ஜெபத்தை நாம் உணர்ந்து சொன்னாலே நாம் கடவுளை போற்றி விடுகிறோம். நம் தேவைகளை கேட்டு விடுகிறோம். நாம் எப்படி வாழ வேண்டும் என சொல்லி விடுகிறோம். இப்போது அர்த்தத்தோடு சொல்வோமா. தினமும் , முடிந்தால் அடிக்கடி சொல்வோமா.

ஜெபம்: விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது என போற்ற பெறுக. உமது ராஜ்ஜியம் வருக. உமது சித்தம் விண்ணத்தில் செய்யப்படுவது போல மண்ணகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அன்றாட உணவை என்று எங்களுக்கு தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்களை குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உடப்படுத்தாதேயும். தீமையிலுருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

Add new comment

12 + 1 =