மாலை நேரத்தில்

அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார் - லூக்கா 24:29. சீடர்கள் இருவர் எருசலேமில் இருந்து எம்மாவூருக்கு சென்று கொண்டு இருந்தனர். போகிற வழியில் இயேசுவை பற்றி பேசிக்கொண்டு போகின்றனர். இயேசுவும் வழிப்போக்கன் போல் அவர்களோடு சேர்ந்து பேசிக்கொண்டே போகிறார். 

அவர்கள் அவரை கட்டாயபடுத்தி அழைத்து தங்க கூறுகிறார்கள். இரவில் அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். இயேசுவோடு மனம் திறந்து பேசியதால், அவரோடு பல விசயங்களை பகிர்ந்து கொண்டதால், அவரை தங்களோடு தங்கும்படி சொன்னதால், அவர்கள் இயேசுவை கண்டு கொண்டார்கள். மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் உள்ளம் பற்றி எரிந்ததை உணர்ந்தார். நாமும் இயேசுவை தேடினால் அவர் நம்மோடு பேசுவார். நாம் நம் வாழ்வில் அதிசயங்களை காண செய்வார்.

ஜெபம்: எங்களோடு தங்கும் ஆண்டவரே. இந்த இருள் சூழ்ந்த உலகில் நாங்கள் வாழ எங்களுக்கு நீர் வேண்டும். எங்களோடு தங்கும் ஆண்டவரே பாதை தெரியாத எங்களுக்கு வழி காட்ட நீர் வேண்டும். எங்களோடு தங்கும் ஆண்டவரே பிரச்சனை, கவலை கண்ணீர் நிறைந்த வாழ்வில் எங்களுக்கு கோட்டையும் அரணுமாக நீர் வேண்டும். ஆண்டவரே, எங்கள் வாழ்வாக, வழியாக, ஒளியாக, எங்களுக்கு எல்லாமாக எங்களோடு தங்கும் ஆண்டவரே.  ஆமென்.

Add new comment

1 + 0 =