மன்னிச்சதுக்கு இவ்வளவு பலனா!!

இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னார் - லூக்கா 23:24. ஆண்டவர் மன்னிக்கிற கடவுள். பழி வாங்குபவர் அல்ல. ஆதாம் ஏவாள் பாவம் செய்த போது ஆண்டவர் மன்னித்ததால்தான் அவர்களுக்கு தோல் ஆடைகளை செய்து உடுத்தினார். அவர்கள் பிழைப்பதற்கு ஒரு வழியும் காட்டுகிறார். தாவீது தவறு செய்த போது மன்னித்ததால் தாவீது நிறைய வெற்றிகளை பெற செய்தார்.

அவர் தன்னை சிலுவை சாவுக்கு உட்படுத்தி, முகத்தில் காறி உமிழ்ந்து, கசையால் அடித்து, முள்முடி வைத்து, ஆடைகளை அவிழ்த்து, அவற்றின் மீது சீட்டு போட்டு, சிலுவையில்  அறைந்து,  விலாவில் குத்தி பாடுபடுத்திய அனைவரையும் மன்னிக்கிறார். தந்தையே இவர்களை மன்னியும் என்கிறார். அவருடைய மன்னிப்புக்கு அளவு இல்லை. எல்லையற்று நிற்கிறது அவரது மன்னிப்பு. ஆண்டவரை மறுதலித்த பாவத்திற்கு அழுது மன்னிப்பு கேட்ட பேதுருவை மன்னித்து அவரை திருச்சபையின் தலைவராக உயர்த்துகிறார். 

ஜெபம்: ஆண்டவரே உம்மைபோற்றுகிறோம். ஆண்டவரே எங்களை மன்னியும். நீர் பாவம் என கருதியதை திரும்ப திரும்ப செய்து உம்மை மனநோக செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறோம். பிறர் எங்களுக்கு எதிராக செய்தவற்றை மன்னிக்கும் நல்ல மனதை எங்களுக்கு தாரும். உம்மை போல நாங்கள் வாழ விரும்புகிறோம். ஆண்டவரே, உம் பிள்ளைகளாக வாழ அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 5 =