Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மனிதத்தை... மனிதத்தை...
இயேசு அவரைப் பார்த்து, “முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார் - மாற்கு 7:27. கனானிய பெண் தன் மகளுக்கு பேய் பிடித்துள்ளது அதிலிருந்து விடுதலைபெற வேண்டும் என கேட்கிறார். அதற்கு ஆண்டவர் இயேசு சொன்னபதில் தான் இது.
நம்மில் பலர் இயேசு கூட சாதி பார்த்தார் என நினைப்போம். இது அப்படியல்ல. அவர் சாதிகளை கடந்து எல்லா மக்களுக்கும் இரக்கம் காட்டினார் என்பதை உலக மக்களுக்கு காட்டவே இப்படி சொன்னார். இங்கு நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு நிகழ்வு. இயேசு ‘ஐயாயிரம் பேருக்கு’ உணவளிக்கும் நிகழ்வு யூதர்களுடைய பகுதியில் நடந்தது; இயேசு ‘நான்காயிரம் பேருக்கு’ உணவளிக்கும் நிகழ்வானது பிறவினத்தார் பகுதியில் நடக்கின்றது.
மேலும் இயேசு ஆயகாரர், ஏழைகள் என பிரித்து பார்க்கவில்லை. இயேசு எல்லா மக்கள்மீதும் இரங்குகின்றவர், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றவர், அவர் வேறுபாடு பார்கிறவர் இல்லை. அனைவரையும் அரவணைத்து நேசிக்கின்ற கடவுள். இயேசுவின் அடிசுவடுகளை பின்பற்றும் நாமும் எல்லோரையும் நேசிப்போம். சாதி வேறுபாடுகளை தாண்டி நம் உறவு பரவட்டும். எல்லோரும் மனிதன் என்ற எண்ணம் மட்டுமே நிலைக்கட்டும்.
செபம்: ஆண்டவரே, உம் பிள்ளைகளாகிய நாங்கள் ஏழை பணக்காரன், உயர்சாதி கீழ்சாதி என வேறுபடுத்தி பார்க்காமல் எல்லோரையும் சகோதரர்களாக ஏற்று கொண்டு வாழ வரம் தாரும். உம்மை போல எங்களுடைய எண்ணங்களும் உயர்ந்தவையாக இருக்க அருள்தாரும். ஆமென்.
Add new comment