மணவாழ்வில் மகிழ்ந்திருக்க..!!

இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார் - மத்தேயு 19:6. கடவுள் திருமணம்  செய்தவர்கள் சேர்ந்து வாழ வேண்டும். மணமுறிவு செய்யகூடாது என்கிறார். மரியாவும் யோசேப்பும் மண ஒப்பந்தம் ஆனவர்கள். மரியா பரிசுத்த ஆவியால் கருவுற்றிருந்தார். நீதிமானாகிய யோசேப்போ அவரை மறைவாக விலக்கி விட நினைக்கிறார். ஆனால் ஆண்டவர் தன் தூதர் மூலம் யோசேப்புக்கு தன் நிகழ்வை தெளிவு படுத்துகிறார். 

எனவே ஆண்டவர் நம் குடும்பங்களில் ஒருமை பட்ட வாழ்வை விரும்புகிறார். கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்வதை அவர் விரும்பவில்லை. நம் துணைக்கான தேடலில் இருந்து திருமணம் குழந்தைகள் என ஒவ்வொரு நிகழ்விலும் நம் ஆண்டவரை முன் வைத்து செய்தோமென்றால், அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தோமென்றால் நம் வாழ்வில் மண முறிவுகள் வராது. திருமணம் ஆனவர்கள் என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள். 

ஜெபம்: ஆண்டவரே நீர் எனக்கு கொடுத்த துணக்காக நன்றி. கொடுக்கப் போகிற  துணைக்காக நன்றி. என் இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் என் துணைக்கு பிரமாணிக்கமாயிருந்து என் வாழ் நாள் எல்லாம் இவரை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன். துணை புரியும். ஆசீர்வதியும். ஆமென்.

Add new comment

3 + 0 =